• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1432-ம் வருவாய் பசலி வருவாய் தீர்வாயம் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1432-ம் வருவாய் பசலி வருவாய் தீர்வாயம் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு

ராஜ்குமார்

UPDATED: May 26, 2023, 8:57:29 PM

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1432-ம் வருவாய் பசலி வருவாய் தீர்வாயம் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் தலைமையில் 24.05.2023 அன்று தொடங்கி 25.05.2023 மற்றும் 26.05.2023 ஆகிய தினங்கள் வரை நடந்தது அதில் அவர் பேசியதாவது 

ஒவ்வொரு வருடமும் தாலுகாவில் வருவாய் கிராமங்களில் உள்ள கணக்குகளை முடிக்கும் நிகழ்வே இந்த வருவாய் தீர்வாயம் ஆகும். ஒவ்வொரு வருவாய் கிராமத்தின் கணக்குகளை சரிபார்த்து அந்த வருவாய் கிராமத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு என்னென்ன குறைகள் இருக்கிறதோ அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

கடையநல்லூர் தாலுகாவில் என் தலைமையில் வருவாய் தீர்வாயம் நடைபெறுகிறது. கடையநல்லூர் தாலுகாவில் 263 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

இன்றைய தினம் 63 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் மீதமுள்ள பட்டா, உதவித்தொகை கேட்ட மனுக்களுக்கும் தீர்வு காணப்படும்.

வருவாய் தீர்வாய பயனாளிகள் 63 பேருக்கு நலத்திட்ட உதவிகள் முறையே 27 பயனாளிகளுக்கு ரூ.42,30,580/- மதிப்பில் கணினிவழி இ-பட்டா, 25 பயனாளிக்கு ரூ.1,12,500/- மதிப்பில் இலவச வீட்டுமனைப்பட்டா, 5 பயனாளிகளுக்கு ரூ.1,24,740/- மதிப்பில் 6 பயனாளிகளுக்கு கணினி பட்டாவும் என ஆகமொத்தம் 63 பயனாளிகளுக்கு ரூ.44,67,820 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி இருக்கிறோம். உங்கள் குறைகளுக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கின்றோம்.

நீங்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் தெரிவித்தார்.

VIDEOS

RELATED NEWS

Recommended