உலக வரலாற்றில் இன்று 25.4.2022

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஏப்ரல் -25 1874 - வானொலியின் தந்தையான மார்க்கோனி பிறந்தார், வானொலியைக் கண்டு பிடித்தவர் இவரே ஆவார். கம்பியற்ற தகவல்தொடர்பு முறை மற்றும் மார்க்கோனி விதி ஆகியவற்றை உருவாக்கியவர். இந்த கண்டுபிடிப்பிற்காக 1909 - இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து பெற்றார். 1911 - தமிழ்த் திரையுலகில் ஆரம்பகால இசையமைப்பாளரான எஸ்.வி.வெங்கட்ராமன் மறைந்தார். இவர் நடிகராகவும் பாடகராகவும் தமிழ்த் திரைப்படங்களில் தனது பங்களிப்பினைத் தந்தவர்.இருநூறுக்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்தார். 1906 - தமிழ் சிறுகதை மன்னன் என்று போற்றப்படும் புதுமைப்பித்தன் பிறந்தார், இவரது இயற்பெயர் சொ. விருத்தாசலம் ஆகும், இவர் மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராக திகழ்ந்தார், நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை பறைசாற்றுகின்றன. 2002 - ல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை ஆக்கியது. 1912 - மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட தமிழறிஞரான மு. வரதராசன் பிறந்தார், இவர் 20 ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவராவார், இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் போன்றவை மட்டுமன்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார். இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரி, சென்னை பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பில் இருந்ததுடன், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகவும் பணியாற்றினார். பன்முக ஆற்றல்கள் கொண்ட இவர் நல்லாசிரியராகவும், பண்பாளராகவும் விளங்கினார். 1943 - தென்னிந்தியத் திரைப்பட நடிகையும், நடிகை கனகா அவர்களின் தாயுமான தேவிகா அவர்கள் பிறந்தார். இவர் தமிழிலும், தெலுங்கிலும் ஏறத்தாழ 150 திரைப்படங்களில் நடித்தார். 1953 – பிரான்சிஸ் கிரிக், ஜேம்ஸ் டூயி வாட்சன் ஆகியோர் மனித குரோமோசோமின் மரபு பண்பை கடத்தும் டி. என். ஏ. மூலக்கூறின் இரட்டை திருகு வட அமைப்பை வெளியிட்டனர். 1961 - சொல்லின் செல்வர் என்று போற்றப்படும் தமிழறிஞரான ரா. பி. சேதுப்பிள்ளை மறைந்தார், இவரொரு சிறந்த எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளராக திகழ்ந்தார், மேலும் இவர் தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர். இனிய உரைச் செய்யுள் எனக் குறிப்பிடும் அளவுக்கு அவரது உரைநடை இனிமை வாய்ந்தது எனப் பலரும் பாராட்டியுள்ளனர். உரைநடையில் அடுக்கு மொழியையும், செய்யுள்களுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரை நடைக்குள் கொண்டு வந்தவர் இவரே ஆவார். 2018 - தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகியான எம். எஸ். இராஜேஸ்வரி மறைந்தார், சிட்டுக் குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா (டவுன் பஸ்) மற்றும் பாப்பா பாடும் பாட்டு ( துர்கா ) போன்ற குழந்தைத்தனமான பாடல்களால் பரவலாக அறியப்படுகிறார். நடிகர் கமலஹாசன் தமது திரைப்பட வாழ்வைத் தொடங்கிய களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற குழந்தைப்பாடல் இன்றும் நினைவு கூரப்படுகிறது. 500 பாடல்களுக்கும் மேலாகப் பாடியுள்ள இராஜேஸ்வரி 1947 இல் தமது திரையுலக வாழ்வை ஏவிஎம் நிறுவனத்தின் நாம் இருவர் திரைப்படத்தில் துவங்கினார். முதன்மை திரை பின்னணிப் பாடகர்களான டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், ஏஎம் இராஜா, கே.ஜே.யேசுதாஸ், எஸ். பி. பாலசுப்பிரமணியன் ஆகியோருடன் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பாடியுள்ளார். உலக மலேரியா நாள் : ( World Malaria Day ) இந்நாளது ஆண்டுதோறும் ஏப்ரல் 25 ஆம் நாள் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. மலேரியா நோயினால் ஆண்டுதோறும் சுமார் 7 லட்சம் பேர் இறக்கின்றனர். உலக அளவில் 3.3 பில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிப்படைகின்றனர்மலேரியா நோயைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் உலக சுகாதார அமைப்பு 2007 - இல் ஏப்ரல் 25 ம் நாளை மலேரியா நாளாக அறிவித்தது. உலக டி.என்.ஏ (DNA) தினம் : 1953 – ஆம் ஆண்டு பிரான்சிஸ் கிரிக், ஜேம்ஸ் டூயி வாட்சன் ஆகியோர் மனித குரோமோசோமின் மரபு பண்பை கடத்தும் டி. என். ஏ. மூலக்கூறின் இரட்டை திருகு வட அமைப்பை வெளியிட்டனர். ( Deoxy ribo nucleic acid - DNA ) அந்நாளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக டி.என்.ஏ தினம் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய செய்திகள் உலகம்,இன்றைய முக்கிய செய்திகள் உலகம்,இன்றைய செய்திகள் உலகம்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest india news tamil,Tamil news daily,World history news,india news live,world news tamil,world news,world news in tamil today,world news today in tamil,In world history today,History news

VIDEOS

RELATED NEWS

Recommended