• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • கோடை விடுமுறையை கழிக்க சென்ற ஐந்து வீடுகளில் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் பத்து லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மடிகணினி உள்ளிட்டவை கொள்ளை.

கோடை விடுமுறையை கழிக்க சென்ற ஐந்து வீடுகளில் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் பத்து லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மடிகணினி உள்ளிட்டவை கொள்ளை.

லட்சுமி காந்த்

UPDATED: May 17, 2023, 1:14:21 PM

காஞ்சிபுரம் மாநகராட்சி பெரியார் நகர் பகுதியில் உள்ள சுதர்சன் நகரில் வசித்து வருபவர் டேனியல் பால், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் தனது குடும்பத்தினருடன் கோடை விடுமுறைக்காக சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு சென்று விட்டு திரும்பி வந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 10 சவரன் தங்க நகைகள் மர்ம நபரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

அதே போல சுதர்சன் நகர் விரிவாக்க பகுதி மற்றும் அருகாமை பகுதிகள் என மொத்தம் ஐந்து வீடுகளில் கையுறை அணிந்த மர்ம நபர் கொள்ளை அடிக்கப்பட்டதாக தெரிய வருகிறது.

வைத்தியநாதன் என்கிற நாடி ஜோதிடர் வீட்டில் 8 சவரன் தங்க நகை,50,000 மதிப்புள்ள லேப்டாப் திருடு போயிருப்பது தெரிவந்துள்ளது.

தமிழரசு என்கிற ஆசிரியர் வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சியானது நடைபெற்றிருக்கிறது. மேலும் இரண்டு வீடுகளின் உரிமையாளர்கள் வராததால் கொள்ளை போனது குறித்து கணக்கிடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தாலுக்கா காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் நாடி ஜோதிடர் வைத்தியநாதன் வீட்டில் கடந்த சனிக்கிழமை அன்று நள்ளிரவு 1.30மணியளில் கையுறை அணிந்தபடி நோட்டமிட்டவாறு வரும் கொள்ளையன் ஒருவர் கொள்ளையடிக்க வீட்டின் சுவரை தாண்டி குதித்த காட்சிகளும், கொள்ளையடித்து கொண்டும் திரும்பும் காட்சிகளும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. 

அதிக அரசு ஊழியர்கள் வசிக்கின்ற இந்தப் பகுதியில் ஒரே ஒரு வாலிபர் கையுறை அணிந்து கொண்ட 5 வீடுகளில் சுமார் பத்து லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் , மடிக்கணினி உள்ளிட்டவை கொள்ளை அடித்தது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

VIDEOS

RELATED NEWS

Recommended