• முகப்பு
  • கல்வி
  • சத்தியமங்கலத்தில், பள்ளி இறுதி தேர்வை வென்ற மாற்றுதிறனாளி மாணவி- ஊராட்சி மன்றத் தலைவர்  மற்றும் கிராம மக்கள் வாழ்த்தினர்.

சத்தியமங்கலத்தில், பள்ளி இறுதி தேர்வை வென்ற மாற்றுதிறனாளி மாணவி- ஊராட்சி மன்றத் தலைவர்  மற்றும் கிராம மக்கள் வாழ்த்தினர்.

மகேஷ் பாண்டியன்

UPDATED: May 22, 2023, 11:16:18 AM

ஈரோடு மாவட்டம், சத்தியமங் கலம், கொமாரபாளையம் ஊராட்சி, எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த, தங்கராஜ், கூலித் தெரழில் செய்து வருகிறார். இவருக்கு ராதா என்கிற மனைவியும், ரம்யா, நதியா என்கிற இரு பெண் குழந் தைகள் உள்ளனர். 

இவரது மூத்தமகள் ரம்யாவிற்கு 15 வயதான நிலையில், இவர் சத்தியமங்கலம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில் படித்து வந்த மாற்றுத் திறனாளியான இவர், பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இவருக்குஆஸ்டியோஜெனெசிஸ் (எலும்புச் சிதைவு நோய்) உள்ளது. இதன் காரணமாக இவர் பள்ளி சென்று வர இய லாமல் இருந்தது. தளர்த்தப் பட்ட அரசு விதிகளின்படி, இதனால் வீட்டிலிருந்தே படித்து வந்து உள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற 2022-23 ஆம் கல்வியாண்டின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 'இவர் தனது தங்கை நதியா வழி காட்டுதலில், தன்னிச்சையாக தேர்வு எழுதி, 335/500 மதிப் பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

இதனை யறிந்த, கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். எம். சரவணன்.பி.காம் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் கள் வடிவேலு, விக்னேஷ்வரி சுப்பிரமணியம் மற்றும் ஊராட்சி செயலர் குமார் ஆகி யோர் மாணவியின் வீட்டிற்கு சென்று, மாணவி ரம்யாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், சால்வை அணிவித்து, பாராட்டு தெரிவித்ததுடன், தனது சொந்த செலவில் மேற்படிப்பு செல்ல, நிதி உதவி அளித்து பாராட்டினர்.

மேலும் இந்த மாணவிக்கு உறுதுணையாக இருந்த, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு பயிற்றுநர்கள் மற்றும் அரசு மாதிரி பெண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசி ரியர் ஆகியோர் மாணவியை இல்லத்தில் நேரில் சந்தித்து, இனிப்பு வழங்கி, வாழ்த்துக் களை தெரிவித்தனர்.

  • 1

VIDEOS

RELATED NEWS

Recommended