• முகப்பு
  • district
  • கும்பகோணத்தில் தமிழக முதல்வர் கொரோனாவிலிருந்து பூரண குணமடைய திமுக சார்பில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பிரட் , சத்துபானம், முககவசம் வழங்கினர்.

கும்பகோணத்தில் தமிழக முதல்வர் கொரோனாவிலிருந்து பூரண குணமடைய திமுக சார்பில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பிரட் , சத்துபானம், முககவசம் வழங்கினர்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பை குறைக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக முதல்வர் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதுடன், கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட முக கவசம் அணிய வேண்டும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகின்றார். இந்நிலையில் கடந்த 12 தேதி தமிழக முதல்வருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானதையடுத்து தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார். இதனால் பொதுமக்களின் அடிப்படை வசதிகள், அத்தியாவசியத் தேவைகளுக்காக நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக சூறாவளி சுற்றுப்பயணம் செய்து நலத்திட்டங்களை நிறைவேற்றி வரும் முதல்வர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து மீண்டும் பணிகளை தொடர வேண்டும். என்று திமுக மாநகராட்சி சார்பில் துணை மேயர் சு.ப தமிழழகன் தலைமையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள 500க்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு பிரட் சத்துபானம் முக கலசத்தை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மண்டல தலைவர் ஆசை மாநகராட்சி துணை செயலாளர் ரவிச்சந்திரன் மாநகராட்சி பொருளாளர் சோடா கிருஷ்ணமூர்த்தி பொதுக்குழு உறுப்பினர் கவிதா மோகன்ராஜ் மாமன்ற உறுப்பினர்கள் அந்தராமன் முருகன் மருத்துவ கண்காணிப்பாளர் கமரூல் ஜமான் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். தமிழக முதல்வர் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து மீண்டும் பணிகள் தொடர திமுக மாநகராட்சி சார்பில் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பிரட் சத்து பானம் முககவசம் வழங்கினார்கள். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

RELATED NEWS

Recommended