• முகப்பு
  • tamilnadu
  • தமிழக அனைத்து சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.

தமிழக அனைத்து சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பள்ளிக்கு செல்லும்போது பணி நிரந்தரம் என்ற நல்ல செய்தியுடன் செல்ல வேண்டும் என்ற நோக்கில் பெரும் முயற்சிகளை சங்கம் எடுத்துக் கொண்டு வருகிறது. 18.05.2022 நேற்று காலை தமிழக அனைத்து சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின் படி தோழமை சங்கத்துடன் இணைந்து ஒருங்கிணைப்பாக சென்று மாநில திட்ட அலுவலகத்தில் இது சம்மந்த பட்ட மாநில திட்ட அதிகாரிகளிடமும் எடுத்து கூறப்பட்டது. பணி நிரந்தரம் என்பது ஒற்றை கோரிக்கை என்பதனையும் பணி நிரந்தரம் கிடைத்தால் மற்றவை தானாக கிடைக்கும் என்றும் எடுத்துரைக்கப்பட்டது. பிறகு பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் அவர்களை சந்திக்க இயலவில்லை. அவர்கள் முக்கிய online கூட்டம் காரணமாக சந்திக்க முடியவில்லை, கோரிக்கையை அலுவலகத்தில் கொடுத்து வர நேர்ந்தது. பின்பு மாலை jacctto jeo ஒருங்கிணைப்பாளரும் TAMS மாநில தலைவருமான தியாகராஜன் அவர்களது அலுவலகத்தில் சந்தித்து, கல்வி அமைச்சரை அனைத்து மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து பேச வாய்ப்பை ஏற்படுத்தி தர கேட்டுக் கொள்ளப்பட்டது. அடுத்த வாரம் அதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்ற முயற்சியில் இறங்கி உள்ளோம் என்றனர். மீண்டும் பள்ளி திறக்கும் போது நல்ல தகவல் பெற்று செல்ல வேண்டும் என்று முனைப்புடன் அனைவரும் செயல்பட்டுக் கொண்டு உள்ளோம் என கூறினர். இந்த ஒருங்கிணைப்பு முயற்சியில் உடன் பயணித்த தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என சங்க நிர்வாகிகள் கூறினர். செய்தியாளர் பா. கணேசன் (அனுபவஸ்தன்)

VIDEOS

RELATED NEWS

Recommended