அ இலை இருந்தால் உலகமே தமிழர் கையில் !

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

அ இலை இருந்தால் உலகமே தமிழர் கையில் ! அ இலை பெட்ரோலுக்கு இணையான மாற்று எரிபொருள். இதை வெளிக் கொண்டுவர இருபது வருடங்களாக போராடும் தமிழ் ஆராய்ச்சியாளர். இறுதியாக அ இலை கொண்டு எரிபொருளை கண்டு பிடித்துள்ளார். அதை 1996 - ல் சென்னை ஐ.ஐ.டி. யில் பரி சோதனை செய்துக்காட்டி பெட்ரோலைவிட சிறந்த எரிபொருள் என சான்றிதழ் வாங்கியுள்ளார். அதே ஐஐடியின் இன்னொரு நிகழ்வு. பின்பு ஐ.ஐ.டி பேராசிரியர்கள் வல்லுனர்கள் முன்பு செய்யும் போது ஏதோ ஒரு குச்சியை வைத்து தண்ணீரில் மூலிகைகளை போட்டு கொதிக்கவைத்து கலக்கிட பெட்ரோல் வந்ததாம். அதை வல்லுனர்கள் சந்தேகித்து கண்ணாடி குச்சியால் செய்ய சொன்னால் .அப்போது பெட்ரோல் வரவில்லை. மீண்டும் அவருடைய குச்சியால் கலங்கிட பெட்ரோல் வந்தது. அதை சந்தேகித்து குச்சியை பரிசோதனைக்கு ஆட்படுத்தவேண்டும். இதில் நாப்தா டொல்யூன் கலந்திருக்கலாம் அது எரிபொராளாக வருகிறது ஆனால் பெட்ரோலில் மற்ற குணங்களை சரிபார்க வேண்டுமென கூறினார்கள். ஒரு யூடியூப் சேனல் இவரது நிகழ்ச்சியை படம்பிடித்தபோதூ இவர் குச்சியில் மெழுகை தடவி ஏமாற்றுவதாக கூறப்பட்டுள்ளது. யூடியூபர் சம்பாதிக்க இவர் ஒத்துழைப்பு தராததால் இவரது மூலப்பொருள்கள் அடங்கிய பையை இராமருக்குத் தெரியாமல் திருட்டு தனமாக சோதனை செய்தும் பார்த்துள்ளது. எதுவும் கிடைக்கவில்லை. அதே பொறாமையில் இவரைப்பற்றி தவறான பதிவை வெளியிட்டிருந்தது. இராமரை பொருத்தமட்டில் தனது ரகசியத்தை காக்கவே பல வகைகளில் ஏமாற்றி சோதனையை மாற்றி மெழுகை வைத்து செய்து காட்டினார். இவரது பேட்டி மூலம் அ இலையும் துளசியும் மூலிகைகளாக சேர்க்கப்படுவது தெரிய வருகிறது. மூலிகை எரிபொருள் எனக்கூறி இந்தியன் ஆயில் கார்பரேசன் அதிகாரிகளின் உதவியுடன் பெட்ரோலிய மூலப் பொருள்களை கள்ளத்தனமாக விற்பனை செய்கின்றார். இப்படி ராமர்பிள்ளை மீது 2000 - ல் எப்.ஐ.ஆர். போடப்படுகிறது. அந்த வழக்கில் இந்தியன் ஆயில் கார்பரேசன் அதிகாரிகள் அப்படி எதுவும் நடக்கவில்லை எனத் தெரிவிக்கின்றனர். மேலும் தன்னுடைய தொடர் முயற்சியால், பெட்ரோல் கலக்கப்படவில்லை என நிதிபதி முன் நிரூபித்துக்காட்டுகின்றார். அதில் பெட்ரோல் ஏதும் கலக்கப்படவில்லை. அது பெட்ரோல், டீசல் போன்று ஒரு மாற்று எரிபொருள் என சில வருடங்கள் கழித்து ராமர் பிள்ளையை சென்னை சி.பி.ஐ. கோர்ட் விடுதலை செய்கின்றது. ஆகஸ்ட் 15 ல் பெட்ரோல் நான்குரூபாய்க்கும், டீசல்மூன்று ரூபாய்க்கும் விற்கும் என புரட்சி அறிவிப்பை வெளியிட்டார். அடுத்த நாளே அவருடைய சோதனைக்கூடம் சீல்வைக்கப் பட்டு கைது செய்யப்பட்டார். அவருடைய மூலிகை பெட்ரோலைபயன் படுத்தினால், இந்தியாவின் பொருளாதாரம் பல மடங்கு உயரும். அங்கீகாரம் கிடைத்தபின்பும் அ இலை எரிபொருளை விற்பனைக்கு கொண்டுவர இயலவில்லை என மனம் குமுறுகிறார் ராமர்பிள்ளை ஒருநாள் பள்ளியில் சமையலறை அருகில், தீயில் பச்சைஇலை வித்தியாசமாக எரியத்துவங்கியுள்ளது. இதைக் கண்ட ராமர் பிள்ளை ஆசிரியரிடம் கேட்கும் போது, அகநானுற்றில் இதற்கு விளக்கம் உள்ளது என தெரிவித்து உள்ளார். மக்கள் அக்காலத்தில் அ இலையை சிக்கி முக்கி கற்கள் மூலம் ஒளிர வைத்து, இரவில் விளக்காக பயன்படுத்தியுள்ளனர் என  அகநானுற்றை படித்து தெரிந்துகொண்டார் ராமர் பிள்ளை. அந்த மூலிகை செடியை தேடிக்கண்டுபபிடித்து, அதை எரிபொருளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். இதனால் பள்ளிக்கூடம் செல்லாமல் பத்து வருடமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளார். 1990 - ல் திருபையா அம்பானியால் வெளிநாடுகளில் கச்சா எண்ணெய் வாங்கி சுத்திகரிக்க பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை உருவாக்கப் பட்டது. இன்று ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 3600 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ராமர்பிள்ளை போன்றவர்கள் இன்னும் தொழில்துவங்கவே முடியாமல் திணறி வருகின்றனர். அ இலை எரிபொருளில் எதைக் கலந்தால் என்ன? அந்த எரிபொருளை பயன்படுத்திய பலர், வண்டி அருமையாக இயங்குகிறது என தெரிவித்து உள்ளனர். இதனால் எந்த ஒரு வண்டியும் பழுதடையவோ, எஞ்சின் வெப்பத்தால் தீப்பிடித்து எரியவோ இல்லை. பின் ஏன் ராமர்பிள்ளையை தடுக்க வேண்டும்? செய்தியாளர் பா. கணேசன்.

VIDEOS

RELATED NEWS

Recommended