• முகப்பு
  • district
  • கக்கன் 114 பிறந்த நாளை முன்னிட்டு ஐஏஎஸ் அதிகாரி ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

கக்கன் 114 பிறந்த நாளை முன்னிட்டு ஐஏஎஸ் அதிகாரி ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் தியாகி கக்கன்ஜி 114வது பிறந்தநாளையொட்டி சமூக ஆர்வலர் தமிழ்வாணன் தலைமையில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து ரவி காமராஜ் குமரவேல் இவர்களது முன்னிலையில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு சுமார் 120 பேருக்கு நினைவு பரிசு கேடயம் வழங்கப்பட்டது. அதோடு நலத்திட்ட உதவிகள் தென் மரக்கன்று வேட்டி புடவை இஸ்திரி பெட்டி தையல் மெஷின் என்று வழங்கிய நிலையில் தவ அமுதம் பள்ளி தாளாளர் செங்கோல் ,மருத்துவர் தாத்தாச்சாரியார் கலந்துகொண்டு பரிசினை பெற்றுச் சென்றனர். அதோடு பள்ளி தாளாளர் செங்கோல் நிகழ்ச்சியில் பேசும்போது நான் சிறு வயதாக இருக்கும் பொழுது எனது தந்தையுடன் தியாகி கக்கன் அவர்களை நேரில் பார்த்திருக்கிறேன் அதோடு அவர் உடல்நலக்குறைவால் இருக்கும் பொழுது கூட எனது தந்தையுடன் சென்னையில் சந்தித்துள்ளோம். அவரைப் போன்ற நேர்மையான அரசியல் தலைவர்கள் சந்தித்தது இல்லை அதோடு மட்டுமில்லாமல் மதுரையில் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட பொழுது மருத்துவமனையில் சாதாரண கிழிந்த பாயில் தரையில் படுத்திருந்தபோது எம்ஜிஆர் ஒரு அரசியல் தலைவரை சந்திக்க வரும்போது தியாகி கக்கன் அவர்களை பார்த்து சகல வசதிகளும் செய்து கொடுத்ததாக தெரிவித்தார். அதோடு கக்கன் நினைத்திருந்தால் எத்தனையோ கோடி சொத்துக்களை சசம்பாதித்து இருக்கலாம் , ஆனால் அவர் அப்படியெல்லாம் செய்யவில்லை அவர் இருக்கும்பொழுது நான்கு வேட்டி நான்கு சட்டைகளை மட்டும் வைத்திருந்ததாக தெரிந்து கொண்டேன் அதோடு கக்கன் சகோதரர் போலீசாக ஆக வேண்டுமென்று பல கற்பனைகளோடு இருந்த நிலையில் தமிழ்நாடு அரசு அவருக்கு போலீஸ் வேலை கொடுக்கப்பட்டது. இதனை அறிந்த கக்கன்ஜி அவரது தம்பியை அழைத்து நான் எட்டு இலாகா மந்திரி இந்த வேலை நான் கொடுத்ததாக அனைவரும் நினைத்துக் கொள்வார்கள் அதனால் இந்த வேலைக்கு போக வேண்டாம் வயல் வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். இதனை ஏற்ற அவரது தம்பி விவசாயம் செய்து வந்தார் இப்படியே ஒரு நேர்மையான தியாகியை இன்னொரு ஜென்மம் சந்திக்க நேரிடுமோ என புகழாரம் சூட்டினார். ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்

VIDEOS

RELATED NEWS

Recommended