• முகப்பு
  • district
  • பட்டுச்சேலை விற்பனையாளர்கள் மத்திய அரசுக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம்.

பட்டுச்சேலை விற்பனையாளர்கள் மத்திய அரசுக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

முகூர்த்த பட்டுக்கு பெயர்பெற்ற காஞ்சிபுரம் பட்டுக்கு தனி திறமை உண்டு. சுபமுகூர்த்தத்துக்கு பட்டு சேலை வாங்க தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா கேரளா கர்நாடகா என வெளி மாவட்டத்தை சேர்ந்த பலர் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்து சுபமுகூர்த்தத்திற்கு பட்டு சேலை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் பட்டு சேலை உற்பத்தியில் மூலக்கூறான கோரா பட்டு விலை மத்திய அரசு கடந்த ஆண்டு ரூ.3200 விற்பனை செய்து வந்த நிலையில் இந்தாண்டு ரூ.6,800 உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 110 % உயர்த்துள்ளது. இதனை கண்டித்து காஞ்சிபுரம், கும்பகோணம், , திருப்பூர் மையங்களில் இன்று ஒரு நாள் கடையடைப்பு நடத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. விலை உயர்வை மத்திய அரசை கண்டித்து காஞ்சிபுரம் காந்தி சாலை பட்டு சேலை விற்பனை மையங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட பட்டு சேலை விற்பனையாளர்கள் மனித சங்கிலியில் மத்திய அரசக்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறு மனித சங்கிலியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தொழிற்சங்கத்தை சேர்ந்த முத்துக்குமார் தலைமையில் பச்சையப்பாஸ் கடை உரிமையாளர் சுந்தர், பட்டு கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த வள்ளிநாயகம், சோமசுந்தரம், விசுவநாதன்,வாசு, நேரு உள்ளிட்ட காஞ்சிபுரம் பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் அமைப்பு, பட்டு கடைகள் - கூட்டுறவு சங்க அமைப்பு, அனைத்து தொழிற்சங்கம் - அனைத்து வர்த்தக சங்க கூட்டமைப்பு, கோரா வர்த்தகங்கள் சார்பில் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.

VIDEOS

RELATED NEWS

Recommended