பள்ளி பஸ் மீது கார் மோதி 5 பேர் பலியான விபத்து நடந்தது எப்படி? கலெக்டர் நேரடி விசாரணை

ராஜ்குமார்

UPDATED: May 24, 2023, 6:25:21 PM

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பந்தப்புளி ரெட்டியபட்டியை சேர்ந்த குருசாமி (45). அவரது மனைவி வேலுத்தாய்(35), உடையம்மாள்(60). மனோஜ் குமார்(22) கற்பகவல்லி உள்ளிட்ட 5 பேர் காரில் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று விட்டு சங்கரன்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

மேல ஒப்பனையாள்புத்தைச் சேர்ந்த ஓட்டுநர் அய்யனார் காரை ஓட்டிச் சென்றார். 

அப்போது  சங்கரன்கோவில் தனியார் பள்ளி  வேன் பனவடலிசத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பனவடலிசத்திரம் பெட்ரோல் பல்க் அருகே வந்தபோது பள்ளி வாகனத்திற்கு முன்பு இருசக்கர வாகனம் ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க பள்ளி வாகன ஓட்டுனர் திருப்பியபோது, எதிரில் வந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரில் இருந்த  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குருசாமி ஓட்டுநர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

பள்ளி வேனில் இருந்த 4 மாணவர்கள் காயமடைந்தனர். தனியார் பள்ளி அனுமதி இன்றி சிறப்பு வகுப்பு நடத்தியதாக கூறப்படுகிறது.

இதனிடையே தகவல் அறிந்து தென்காசி ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து காவல்துறையிடம் விசாரணை மேற்கொண்டார்.

இந்நிலையில் இந்த கொடூர விபத்து சம்பவத்தில் பள்ளி வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதிய கொடூர விபத்தில் ஐந்து நபர்கள் பலியாவதற்கு காரணமாக இருந்தது..யார்..? மாணவிகளும் காயமடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் கோடை விடுமுறை காலத்தில் பள்ளிகள் நடத்த அனுமதியினை எப்படி வழங்கினார்கள்.

கோடைக்காலத்தில் மாணவர்களுக்கு அனுமதியின்றி வகுப்புக்களை நடத்த தென்காசி மாவட்ட கல்வித்துறை எப்படி அனுமதி வழங்கியது...என்ற கேள்வியும் எழுந்துள்ளது...

கல்வித்துறையும்..மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended