• முகப்பு
  • political
  • கூட்டணியில் விரிசலா காங்கிரஸ் திமுகவை எதிர்க்க தொடங்கி விட்டதா?

கூட்டணியில் விரிசலா காங்கிரஸ் திமுகவை எதிர்க்க தொடங்கி விட்டதா?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை திமுக கொண்டாடி வரும் நிலையில் இச்செயல் காங்கிரசார் மத்தியில் எரிச்சலூட்டுகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி இவ்விவகாரத்தில் எந்த ஒரு முரண்பாடுகளும் கிடையாது , திமுகவுடன் கூட்டணி தொடரும் கொள்கை வேறு , கூட்டணி வேறு அவர்களின் கொள்கை விஷயத்தில் நாங்கள் தலையிட மாட்டோம். இவ்வாறு கூறி சில மணி நேரத்திலேயே இதனைக் கண்டித்து திமுக அரசை எதிர்த்து தருமபுரி காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சிற்றரசு ராஜினாமா செய்தார். இவரது ராஜினாமாவால் மற்ற காங்கிரஸ் தலைவர்களும் அடுத்தடுத்து ராஜினாமா செய்து , திமுகவை எதிர்க்க போகிறார்களா அல்லது எப்போதும் போல் கொள்கை முடிவு என்று கூறி அமைதியாக இருக்கப் போகிறார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

VIDEOS

RELATED NEWS

Recommended