அன்னையர் தின வாழ்த்துக்கள்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே.... கொற்றவனாயினும் மற்றவராயினும் உற்றோராயிரம் பேரினும் முன்னின்று உயிரைக் காப்பவள் தாயன்றோ.... உண்டி சுருக்கி உயிர் மூச்சடக்கி உதிரமீந்து உயிருமீந்து உயர்ந்தவள் தாயன்றோ..... பல் முளைக்கும் முன்னே பொக்கை சிரிப்பினை தன் பொன்னுலகமென மாற்றிக் கொண்டவள்.... பல் விழுந்த பின்னே வருமவள் பொக்கைச் சிரிப்பை தன்னுலகமென ஆக்கிக்கொள்வோம் நாம்..... அவசர உலகம் ஆர்ப்பரிக்கும் எண்ணம் அடிப்படைத் தேவை தன் கிள்ளை வாழ்வு பொருள் தேடிய புறப்பாடு இல்லத்து இறுக்கம் இவை காட்டி புறந்தள்ளி புறப்படாதே உன் தாயைத் தள்ளி.... இவ்வுலகில் அவளின்றி நாமில்லை அவளுக்கு நாமின்றி வேறுலகமில்லை.... தாய்க்குத் தாயாய் மாறி தாயைப் போற்றுவோம் தாய்மை போற்றுவோம் இன்று மட்டுமின்றி என்றென்றும்.... இனிய அன்னையர் தின வாழ்த்துகள். தி கிரேட் இந்தியா நியூஸ்.

VIDEOS

RELATED NEWS

Recommended