• முகப்பு
  • district
  • கும்பகோணத்தில் பள்ளி தீ விபத்து 18ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நினைவு பூங்கா மற்றும் தீ விபத்து நடைபெற்ற பள்ளியில் அரசு தலைமை கொறடா அஞ்சலி.

கும்பகோணத்தில் பள்ளி தீ விபத்து 18ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நினைவு பூங்கா மற்றும் தீ விபத்து நடைபெற்ற பள்ளியில் அரசு தலைமை கொறடா அஞ்சலி.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி காசிராமன் தெரு ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் பள்ளியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அத்துடன் 18 குழந்தைகள் காயமடைந்தனர். இந்த துயர சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது . ஆண்டுதோறும் இறந்த குழந்தைகளின் நினைவு தினம் ஜூலை 16ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 18ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி குழந்தைகளை இழந்த பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் இறந்த குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து , புத்தாடைகள் வைத்து கண்ணீரை காணிக்கையாக செலுத்தினர். அதனைத் தொடர்ந்து திமுக மாநகரம் சார்பில் அரசு தலைமை கொறடா கோவி செழியன் பாலக்கரையிலிருந்து ஊர்வலமாக வந்து குழந்தைகள் நினைவு பூங்காவில் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். அதனை தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக வந்து உயிரிழந்த குழந்தைகள் பள்ளியில் வைக்கப்பட்டுள்ள குழந்தைகள் உருவப்படத்திற்கு மலர் வளையம் வைத்து மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள். இதில் மாநகராட்சி மேயர் சரவணன் துணை மேயர் சு.ப தமிழழகன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் தொடர்ந்து குழந்தை இழந்த பெற்றோர்கள் அரசு தலைமை கொறடா கோவி செழியனிடம் ஜூலை 16 குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வலியுறுத்தினார்கள். அரசு தலைமை கொறடா கோவி செழியன் இது குறித்து தமிழக முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் சென்று ஜூலை 16 அன்று குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்கவும் தொடர்ந்து உள்ளூர் விடுமுறை அளிக்கவும் வலியுறுத்துவேன் என்று தெரிவித்தார். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

RELATED NEWS

Recommended