• முகப்பு
  • காஞ்சிபுரம் அருகே உள்ள வெங்கச்சேரி தடுப்பணையில் நான்கு நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி பள்

காஞ்சிபுரம் அருகே உள்ள வெங்கச்சேரி தடுப்பணையில் நான்கு நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி பள்

Entertainment

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

காஞ்சிபுரம் அருகே உள்ள வெங்கச்சேரி தடுப்பணையில் நான்கு நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி பள்ளி மாணவர்கள் மேலிருந்து கீழே குதித்து விளையாடுவதால் விபத்து ஏற்படும் அபாயம். காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள். திருவண்ணாமலை மாவட்டத்தில், ஜவ்வாது மலை பகுதியில் உருவாகும் செய்யாறு, பெருநகர் வழியாக காஞ்சிபுரம்மாவட்டத்திற்குள் நுழைந்து அனுமந்தண்டலம், வெங்கச்சேரி வழியாக, திருமுக்கூடலில் பாலாற்றில் இணைகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக செல்லும் செய்யாற்றில், தடுப்பணை ஏதும் இல்லாத காரணத்தால், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 2017ல், எட்டுக் கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெங்கச்சேரியில், தடுப்பணை கட்டப்பட்டது. வட கிழக்கு பருவ மழை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், தண்டரை அணைக்கட்டில் இருந்து, 4,000 கன அடி வெள்ள உபரி நீர் திறந்து விடப்பட்டதால், செய்யாறு ஆற்றில் நீர்பெருகெடுத்து வெங்கச்சேரி தடுப்பணை நிரம்பி அரை அடி உயரத்துக்கு நீர் வழிந்தோடி வருகிறது. வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு காஞ்சிபுரம், திருவண்ணாமலை,வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களின் ஆட்சியர்கள் வெள்ள எச்சரிக்கை நோட்டீஸ் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் மாகறல் அடுத்த வெங்கச்சேரி தடுப்பணையில் உள்ளூர் மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சுற்றுலா செல்வது போல இப்பகுதியில் குவிந்து வருகின்றனர். தொடர்ந்து நான்கு நாட்கள் பள்ளி விடுமுறை விட்ட காரணத்தினால் அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் தடுப்பணை மேலே உள்ள பாலத்தில் ஏறி அதிலிருந்து கீழே குதித்து விளையாடுவதால் தூணின் சுற்றுச்சுவரில் மோதும் அபாயமும் ஆழமான பகுதியில் சிக்கும் அபாயம் ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் அச்சப்படுகின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில் வெங்கச்சேரி தடுப்பணையில் குளிக்கின்ற பள்ளி மாணவர்களை எச்சரித்து வெளியேற்றி அங்கு காவலுக்கு ஆட்களை நியமிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended