• முகப்பு
  • political
  • அதிமுக திருவாரூர் மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்எல்ஏ மீண்டும் போட்டியின்றி தேர்வு.

அதிமுக திருவாரூர் மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்எல்ஏ மீண்டும் போட்டியின்றி தேர்வு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவாரூர் : தமிழகத்தில் அதிமுக சார்பில் உட்கட்சித் தேர்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே வார்டு செயலாளர் நகர செயலாளர் ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் தற்போது மாவட்ட செயலாளர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் உட்கட்சித் தேர்தல் தமிழகம் முழுவதும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதிமுகவின் திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்புகளுக்கான அமைப்பு தேர்தல் நடைபெற்றது. கட்சியின் அமைப்புச் செயலாளர் திண்டுக்கல் முன்னாள் மேயர் மருதராஜ், மாநில இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்தலை நடத்தினர். இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்எல்ஏ போட்டியிடுவதாக அவரது சார்பில் நிர்வாகிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். வேறு யாரும் வேட்புமனு வழங்காத நிலையில் அனைவரின் ஆதரவுடன் ஏகமனதாக முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்எல்ஏ போட்டியின்றி மாவட்டச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுபோல் மாவட்ட அளவிலான மற்ற அனைத்து நிர்வாகிகளுக்கும் ஆன வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்வில் கட்சியின் அமைப்பு செயலாளர் ராஜமாணிக்கம், திருவாரூர் மாவட்டத்தினை சேர்ந்த ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கட்சியின் பிற அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்ட செய்தியாளர் இளவரசன். இன்றைய செய்திகள் திருவாரூர் தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Thiruvarur news tamil,Thiruvarur news,Thiruvarur news live,admk, nomination for the post of thiruvarur District AIADMK Secretary

VIDEOS

RELATED NEWS

Recommended