• முகப்பு
  • political
  • அதிமுக திருவாரூர் மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்எல்ஏ தொடர்ந்து ஏழாவது முறையாக தேர்வு

அதிமுக திருவாரூர் மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்எல்ஏ தொடர்ந்து ஏழாவது முறையாக தேர்வு

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவாரூர் : தமிழகத்தில் அதிமுக சார்பில் உட்கட்சித் தேர்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே வார்டு செயலாளர் நகர செயலாளர் ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் தற்போது மாவட்ட செயலாளர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் உட்கட்சித் தேர்தல் தமிழகம் முழுவதும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருவாரூரில் அதிமுகவின் திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்புகளுக்கான அமைப்பு தேர்தல் நடைபெற்றது. கட்சியின் அமைப்புச் செயலாளர் திண்டுக்கல் முன்னாள் மேயர் மருதராஜ், மாநில இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்தலை நடத்தினர். இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்எல்ஏ போட்டியிடுவதாக அவரது சார்பில் நிர்வாகிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். வேறு யாரும் வேட்புமனு வழங்காத நிலையில் அனைவரின் ஆதரவுடன் ஏகமனதாக முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்எல்ஏ போட்டியின்றி ஏழாவது முறையாகமாவட்டச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இன்று திருவாரூர் பகுதிக்கு வருகை தந்த முன்னாள் அமைச்சரும் மாவட்ட கழக செயலாளருமான காமராஜ் அவர்களுக்கு அதிமுகவின் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியின் தொண்டர்கள் சிங்களாஞ்சேரி ரயில்வேகேட் அருகே மேள தாள வாத்தியங்களுடன் உற்சாக வரவேற்பு அளிகப்பட்டது . இதனைத் தொடர்ந்து விளமல் கடைத்தெரு பகுதியில் கட்சி நிர்வாகிகள் மாலை மற்றும் சால்வை அணிவித்து வரவேற்பளித்தனர் மேலும் திருவாரூர் புது தெருவில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு கட்சி நிர்வாகிகளுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதன்பிறகு தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார் இதில் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருவாரூர் செய்தியாளர் இளவரசன். இன்றைய செய்திகள் திருவாரூர் தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Thiruvarur flash news tamil,Thiruvarur latest tamil news,Thiruvarur todays news tamil,Former minister Kamaraj MLA has been elected AIADMK Thiruvarur district secretary for the seventh consecutive

VIDEOS

RELATED NEWS

Recommended