• முகப்பு
  • மத்திய பல்கலைக்கழகத்தில் கிராமபுறத்தை சேர்ந்த பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்தியவர்களுக்க?

மத்திய பல்கலைக்கழகத்தில் கிராமபுறத்தை சேர்ந்த பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்தியவர்களுக்க?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவாரூர் : திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் கிராமப்புற மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கான பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் பள்ளி இடை நின்றவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை தொடங்கவிருக்கிறது. அதன் தொடக்க நிகழ்ச்சி பல்கலைக்கழக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பில் 30 வயதிற்குட்பட்ட பள்ளி படிப்பை இடையில் நிறுத்திய ஆண் பெண் இருபாலரும் கலந்து கொண்டு பயிற்சி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி என்பது தோட்டக்கலை நிபுணர் பயிற்சி, சுற்றுலா வழிகாட்டி பயிற்சி, மற்றும் வீட்டு பராமரிப்பாளர் பயிற்சி ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழங்கப்பட உள்ளது. ஒரு பயிற்சிக்கு 20 மாணவர்கள் வீதம் மொத்தம் 60 நபர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.மேலும் இந்த பயிற்சிக்கு மாத ஊக்கத் தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி மொத்தம் மூன்று மாதங்கள் நடைபெறுவதாகவும், பள்ளி படிப்பை இடையில் நிறுத்திய கிராமப்புற மாணவர்களுக்கு ஊக்கத் தொகையுடன் கூடிய பயிற்சி அளித்து அதன் மூலம் அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக இந்த இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப் படுவதாகவும் இந்த பயிற்சி வகுப்பின் கண்காணிப்பு அலுவலர் டாக்டர் சிவகாமி தெரிவித்தார். இந்த நிகழ்வில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கிருஷ்ணன், பதிவாளர் சுலோக்சனா சேகர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி பெறும் மாணவர்கள் கலந்து கொண்டனர்

VIDEOS

RELATED NEWS

Recommended