• முகப்பு
  • pondichery
  • அரசு மகளிர் கல்லூரியில் நடந்த fare well நிகழ்ச்சியில் மாணவிகளுக்கிடையே அடிதடி மோதலால் போர்க்களமானது !

அரசு மகளிர் கல்லூரியில் நடந்த fare well நிகழ்ச்சியில் மாணவிகளுக்கிடையே அடிதடி மோதலால் போர்க்களமானது !

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

புதுச்சேரி முத்தியால்பேட்டை பாரதிதாசன் அரசு மகளிர் பெண்கள் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் மூன்றாமாண்டு வரலாற்றுத்துறையில் ஃபேர்வெல் டே நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரியில் உள்ள அனைத்துத் துறை மாணவிகளும் கலந்து கொண்டுள்ளனர். இதில் ஒரு சில மாணவிகள் எங்க நிகழ்ச்சிக்கு எப்படி வரலாம் என்று கூறி, மற்ற துறை மாணவிகளுடன் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர் . ஒரு கட்டத்தில் மாணவிகள் சரமாரியாக ஒருவருக்கு ஒருவர் கட்டி புரண்டு சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மோதல் குறித்து கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. புதுச்சேரி செய்தியாளர் சக்திவேல்.பா.

VIDEOS

RELATED NEWS

Recommended