• முகப்பு
  • crime
  • குன்னத்தில் சீட்டு கம்பெனி வைத்து ஐம்பது லட்சம் மோசடி , மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.

குன்னத்தில் சீட்டு கம்பெனி வைத்து ஐம்பது லட்சம் மோசடி , மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஜீலை 9. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அந்தூர் கிராமத்தை சேர்ந்த நீதிபதியிடம் ரூ.4,54,775/-, ஆய்க்குடி பால்சாமியிடம் ரூ.1,25,550/- ,கொளப்பாடி தியாகராஜனிடம் ரூ.3,18,450/- பரவாய் ரவிச்சந்திரனிடம் ரூ,1,25,550/- வேப்பூர் சங்கரிடம் ரூ.1,25,250/- கொளப்பாடி பழனிவேலிடம் ரூ.2,65,900/- கொளப்பாடி இராஜேந்திரனிடம் ரூ.3,19,900/- பரவாய் இராமலிங்கத்திடம் ரூ.3,62,950/- வேப்பூர் கருணாகரனிடம் ரூ.6,53,350/- ஆய்க்குடி தியாகராஜனிடம் ரூ.3,18,450/- பரவாய் சதீஸ்குமாரிடம் ரூ.3,98,150/- ஆகியோர்களிடமும் மற்றும் பலரிடமும் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், வரகூர் அஞ்சல், அந்தூர் கிராமம் கதவு எண்: 2/136 என்ற முகவரியில் வசிக்கும் மாணிக்கம் மகன் மதிபாலன் குன்னத்தில் சீட்டு கம்பெனி வைத்து நடத்தி வருவதாகவும் , என் சீட்டு கம்பெனியில் சேர்ந்தால் குறுகிய காலத்தில் அதிகம் பணம் கிடைக்கும் என்று பலரிடம் ஆசைவார்த்தை கூறி நம்பவைத்து ஒரு கட்டை நோட்டின் மூலம் அவரே கைபட எழுதி பெற்றுக்கொண்டு மோசடி செய்து ஏமாற்றிவிட்டார், என்று மதிபாலனுக்கு ஏமாற்றும் எண்ணம் உள்ளது என்றும் இது சம்மந்தமாக குன்னத்தில் எம்பிஎம் செல்போன் கடைமுன்பு மதிபாலனிடம் கேட்டபோது ஆபாசமாக திட்டி மிரட்டினார் என்றும் , மிரட்டியதால் எங்களுக்கு பயம் ஏற்பட்டது. மதிபாலன் மீது உரிய நடவடிக்கை எடுத்து சீட்டு பணத்தை மீட்டு தறுமாறு கேட்டு சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் பெரம்பலூர் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க கேட்டுள்ளனர். இது பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பெரம்பலூர் செய்தியாளர் ஜகாங்கீர்.

VIDEOS

RELATED NEWS

Recommended