• முகப்பு
  • district
  • பாபநாசத்தில் விவசாயத்திற்கு எந்த உதவியும் செய்யாத வருவாய் துறை, வேளாண்மைத் துறை, நீர்வளத்துறை, மின்சார வாரியம் கண்டித்து விவசாயிகள் போராட்டம்.

பாபநாசத்தில் விவசாயத்திற்கு எந்த உதவியும் செய்யாத வருவாய் துறை, வேளாண்மைத் துறை, நீர்வளத்துறை, மின்சார வாரியம் கண்டித்து விவசாயிகள் போராட்டம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணம் அருகே பாபநாசத்தில் விவசாயத்துக்கு தேவையான நேரத்தில் உதவி செய்யாத வருவாய் துறை , வேளாண்மைத் துறை , நீர்வளத்துறை , மின்சார வாரியம் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் . வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் கண்ணன் மாவட்ட துணைச் செயலாளர் காதர் உசேன் மாவட்ட செயற்குழு சிவகுரு கஸ்தூரிபாய் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த காத்திருப்பு போராட்டத்தில் உரத்தட்டுப்பாட்டை நீக்கக் கோரியும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், யூரியாவுடன் இதர பொருட்களை வற்புறுத்தி விற்பதை தடுக்கக் கோரியும் தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கக் கோரியும், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றக் கோரியும், செம்மங்குடி வருவாய் கிராமத்தில் கருப்பூர் கிராமத்திற்கு புதிய மின்மாற்றி அமைத்து மின் அழுத்த குறைபாட்டை நீக்க வேண்டும். அரையபுரம், பெருமாங்குடி, பண்டாரவாடை, தேவராயன்பேட்டை வாய்க்கால்களை முறையாக தூர்வாரி பொய்கையில் (சுள்ளன் ஆறு) நீர் தடையின்றி வடிவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும உள் வாய்க்கால்களை தூர்வாரியும், உள் மதகுகளை சரி செய்தும், தரிசு நிலங்களில் சாகுபடி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்பாராத மழை காரணமாக ஏற்பட்ட சாகுபடி இழப்பிற்கு (பசலி 1431) மாநில அரசால் வழங்கப்பட்ட இடுபொருள் நிவரணத்திற்கு முறையாக கணக்கெடுப்பு நடத்தாத வருவாய்த்துறை, வேளாண்துறை அலுவலர்களை கண்டித்தும் பண்டாரவாடை கிராமத்தில் நிலுவை இனத்தை ரத்து செய்து, விவசாயிகள் வங்கிக்கடன், நிவாரணம் பெற சிட்டா, அடங்கல் வழங்கக் வேண்டும் . லிங்கமேடு - மாத்தூர் வாய்க்காலை தூர்வாரவும், பசுபதி கோவில் தெற்கு தெருவிற்கு சாலை அமைத்து தர கோரியும் கிராம நிர்வாக அலுவலகங்களில் கிஸ்தி ரசீது தேவையின் அடிப்படையில் விவசாயிகளுக்கு உடன்வழங்கவும், முறையாக சாகுபடி செய்து வரும் சிறு விவசாயிகளுக்கு சாகுபடி உரிமை (RTR) தாமதமின்றி வழங்கக் வேண்டும். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் ஓய்வு இடத்திற்காக கருப்பூர் கிராமத்தில் நஞ்சை விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை நிறுத்தி அருகிலுள்ள புஞ்சை, புறம்போக்கு இடங்களை கையகப்படுத்தக் கோரியும் , விவசாயிகள் சம்மந்தப்பட்ட அனைத்து கூட்டங்களுக்கும், அனைத்து விவசாய சங்க பொறுப்பாளர்களுக்கும் முறையாக அழைப்பு விடுக்கக் வேண்டியும் , உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended