• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • மண் திருட்டுக்கு இடையூறாக உள்ள 40க்கும் மேற்பட்ட பனை மரங்களை மண் கொள்ளையர்கள் வெட்டி சேதப்படுத்தியதாக விவசாயிகள் புகார்.

மண் திருட்டுக்கு இடையூறாக உள்ள 40க்கும் மேற்பட்ட பனை மரங்களை மண் கொள்ளையர்கள் வெட்டி சேதப்படுத்தியதாக விவசாயிகள் புகார்.

அந்தோணி ராஜ்

UPDATED: Mar 27, 2024, 11:05:56 AM

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே புத்தூர் கம்பிகுளம் கண்மாய் பகுதியில் தளவாய்புரம் காவல் துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த லாரிகளை மடக்கி சோதனை செய்தனர்.

Also Watch : அமலாக்கத் துறையினரையே உளவு பார்த்த கெஜ்ரிவால் நடந்தது என்ன ?

சோதனையில் 3 டிப்பர் லாரிகளில் அனுமதியின்றி சவுடு மண் கடத்தி வருவது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 26 யூனிட் மண்ணுடன் 3 லாரிகளையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

Also Watch : விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் சின்னம் ஒதுக்கப்படாதது ஏன்? - துரை.வைகோ

மேலும் மண் திருட்டில் ஈடுபட்டதாக சுரண்டையை சேர்ந்த மணி, முதுகுளத்தூரை சேர்ந்த சேது மற்றும் மூன்று வாய்க்கால் பகுதியை சேர்ந்த துரை ஆகிய மூவர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Also Watch : இந்த தேர்தலோடு திமுக என்ற கட்சி காற்றோடு பறக்க வேண்டும்

இந்த நிலையில் மண் கடத்தி செல்லும் வழியில் இடையூறாக இருப்பதாக கூறி மண் திருடர்கள் அங்கிருந்த 40க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டி சாய்த்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. புத்தூர், நல்ல மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான பனை மரங்கள் உள்ளது.

Also Watch : நெஞ்சு வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் உடைய பழம் எது தெரியுமா ?

கோடை காலத்தில் பதனீர் இறக்கி கருப்பட்டி உற்பத்தி பிரதானமாக நடைபெறுவது வழக்கம். தற்போது வெயில் காலம் தொடங்கி உள்ளதால் பதனீர் இறக்குவதற்காக மரங்களை விவசாயிகள் தயார் செய்து வைத்துள்ளனர்.

Also Watch : குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரம் செய்வதறியாது தவித்த பெற்றோர்.

இந்த நிலையில் மண் திருடுவதற்காக மரங்கள் வெட்டப்பட்டால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும், பனை மரங்களை வெட்டி சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புத்தூர் பகுதியை சேர்ந்த கருப்பட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended