• முகப்பு
  • india
  • விவசாயிகள் சங்கம் போராட்டம் அறிவிப்பு.

விவசாயிகள் சங்கம் போராட்டம் அறிவிப்பு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தேசிய தென்னிந்தியநதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மத்தியமண்டல நிர்வாகிகள் கூட்டம் 14. 05. 2022 ந்தேதி சனிக் கிழமை இரவு 8 மணிக்கு திருச்சியில் உள்ளசங்கத்தின் தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் P.அய்யாக்கண்ணு தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தின் இறுதியில் கீழ்கண்டதீர்மானங்களை நிறை வேற்ற கோரி விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் சென்னைமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்த ஏக மனதாக முடிவு செய்யப் பட்டது. ரூபாய் 950/- க்கு விற்ற பொட்டாஷ் உரத்தை ரூபாய் 1700/- க்கு மத்திய அரசு விற்பனை செய்வதை கண்டித்தும், 100 நாட்கள் வேலை ஆட்களை வருடத்திற்கு 8 மாதத்திற்கு வைத்து கொண்டு வேலை வழங்கியும், மழை காலங்களில் 4 மாதங்களை விவசாய வேலைக்கு ( நடவு, களை எடுப்பு ) பயன் படுத்த அனுமதிக்க வேண்டியும், மாவட்ட ஆட்சியர், மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் ( MD ), இணைப்பதிவாளர் ( JR ) ஆகியோர்கள்கூறினாலும் கூட்டுறவுசங்கத்தின் செயலாளர்கள் விவசாயிகளுக்கு Scale of Finance ன்படி விவசாயிகளுக்கு கடனும் வாழைக்கு மூங்கில் வாங்க கடன் கொடுக்காமல்மறுப்பதை கண்டித்தும், தனியார் நிதி நிறுவனங்கள் கொரோனா காலத்தில் வட்டிக்கு வட்டி போட்டு கட்ட வில்லை என்று விவசாயிகளின் வாகனங்களை திருடி செல்ல கூடாது என்று உச்ச நீதி மன்றம் கூறியும் திருடுபவர்களை தடுக்க வேண்டியும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ( DPC ) வருடம் முழுவதும் லஞ்சம் வாங்காமல் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய வேண்டியும், ஓடை, ஏரி, வாரி, குளம், வாய்கால், ஆறுகளில் உள்ளகாட்டு கருவ முட்களை அகற்றி ஓடையை, வாரியை திருட்டு தனமாக தரிசாகமாற்றி பட்டாவழங்கிய பட்டாவை ரத்துசெய்ய கோரியும், திருச்சி மாவட்டம் மணப் பாறை ஒன்றியம் அருகே கரும்புலிப் பட்டி கிராமத்தைசேர்ந்த விவசாயி பன்னீர் செல்வம் தன்னுடையநிலத்தில் விவசாயப் பணிகளை மேற் கொள்ள குளித்தலை பாரதஸ்டேட் வங்கியில் ரூபாய் 14,00,000/- கடன் பெற்றார். வங்கி நிர்வாகம் வட்டிக்கு மேல் வட்டி போட்டு ரூபாய் 58,00,000/- செலுத்த வேண்டும் என்று கூறி DRT கோர்ட்டில் வழக்குபோட்டு தீர்ப்பு வாங்கி, மேற்படி விவசாயி வங்கியில் கொடுத்த 11 ஏக்கர் நிலத்தை அவருக்கே தெரியாமல், அவரை கேட்காமல் ரூ. 3 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ.58,00,000/-க்கு ஏலம் விட்டத்தை கண்டித்தும், வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யக்காண்ணு அவர்களின் தலைமையில் விவசாயிகள் சென்னைமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனர். செய்தியாளர்: பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended