• முகப்பு
  • குற்றம்
  • விழுப்புரத்தில் பனை விவசாயிகள் மீது சாராயம் விற்றதாக பொய் வழக்கு.

விழுப்புரத்தில் பனை விவசாயிகள் மீது சாராயம் விற்றதாக பொய் வழக்கு.

மேஷாக்

UPDATED: May 27, 2023, 11:13:38 AM

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் பூரிகுடிசை பகுதியில் இன்று கஞ்சனூர் காவல் துறையினரால் பனை மரங்கள் இருந்து நுங்கு, பனை விதை போன்ற மூல ஆதாரங்கள் உற்பத்தி ஆகும் பனை பாலை எனப்படும் இளம் நுங்கு குளைகளை வெட்டி வீழ்த்தி உள்ளனர்,

மேலும் அங்கு இருக்கும் பனை விவசாயிகளிடம் பனைமரம் ஏறவும் நுங்கு வெட்டவோ பதநீர் இரக்கவோ கள் இறக்கவோ பனை சார்ந்த எந்த வேலை செய்தாலும் கைது செய்து கள்ளச்சாராய வழக்கு போடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர் எனவும்

காவல்துறையினர் தங்கள் அதிகாரத்தை வைத்து எங்களை வஞ்சிப்பதாகவும் , காவலர்கள் பனை விவசாயிகள் வயிற்றில் அடித்து எங்களை தகாத வார்த்தைகளை கூறி துன்புறுத்துகிறார்கள் எனவும்

சாராய வியாபாரிகளை காப்பாற்றும் முயற்சியில் ஒன்றும் தெரியாத அப்பாவி பணையேரிகளை பணையம் வைத்தது காவல் துறை எனவும் நேற்று 26.5.2023 இரண்டு பணையேரிகள் மீது சாராய வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர் எனவும் அப்பகுதி பனை விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

சிறையில் இருக்கும் பனை விவசாயின் தந்தையை படத்தில் காணலாம் அதிகார வர்க்கத்தின் அத்து மீறல்களை கண்டித்து கோஷமிட்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended