• முகப்பு
  • world
  • எஞ்சினீரிங் மார்வெல் – காரகோரம் ஹைவே ஒரு பார்வை!

எஞ்சினீரிங் மார்வெல் – காரகோரம் ஹைவே ஒரு பார்வை!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கீழே இருக்கும் வீடியோவை காண்பதற்கு முன்னால், இதைப்பற்றிய பிரமிக்க வைக்கும் சில விவரங்கள். பாகிஸ்தானிலிருந்து – சீனாவிற்கு செல்லும், 1300 கிலோமீட்டர்தூர மலைப்பாதை காரகோரம்ஹைவே (Karakoram Highway) இந்தபெருஞ்சாலை பால்டிஸ்தானில்உள்ள கில்கிட் ( Gilgit - ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள ஒரு பகுதி) பண்டைக்கால சில்க்ரோடுடன் இணைக்கிறது. இதில் 806 கி.மீ. பாகிஸ்தான் எல்லையிலும் மீதி சீன எல்லையிலும் அமைந்திருக்கிறது. இந்தப்பாதையை அமைக்க 20 ஆண்டுகள் பிடித்திருக்கிறது. பாகிஸ்தானுக்கும், சீனாவிற்கும் இடையே ஏற்பட்ட உடன்பாடின்படி, பெரும்பாலான செலவு, சீனாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த பாதையை உருவாக்கும் பணியில் நிலச்சரிவுகளாலும், மலையிலிருந்து சறுக்கிவிழ நேர்ந்ததாலும், பணியில் இருக்கும்போதே – 810 பாகிஸ்தானியர்களும், 200 சீன பணியாளர்களும் உயிரை இழந்திருக்கிறார்கள். காரகோரம் மலைச் சிகரங்களை கடக்கும்போது, இந்தப் பாதை சுமார் 15,466 அடி அதாவது 4,714 மீட்டர் உயரத்தில் செல்கிறது. உலகத்தின் 26,000அடி (எட்டாயிரம் மீட்டர்) உயரத்தில் இருக்கும் 5 சிகரங்களை இந்த பாதையில் பயணிக்கும் போது பார்க்க முடியும், இதிலிருந்து நெருங்க முடியும். உலகத்தின் மிக அதிசயமான, ஆபத்தான பாதையில் பயணம்!!!

VIDEOS

RELATED NEWS

Recommended