• முகப்பு
  • சபரிமலை செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க கூடாது என்பதை வலியுறுத்??

சபரிமலை செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க கூடாது என்பதை வலியுறுத்??

Entertainment

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சபரிமலை செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க கூடாது என்பதை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி போராட்டம். சுங்கச்சாவடியை முற்றுகையிட வந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.   கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் அதிக அளவிலான பக்தர்கள் அய்யப்பன் கோவிலுக்கு மாலையிட்டு விரதம் இருந்து சபரிமலை செல்வார்கள். அதன்படி ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்க கூடாது, சபரிமலையில் தமிழக அரசு சார்பில் தமிழக பக்தர்களுக்கு தங்குமிடம், உணவு வசதி ஏற்படுத்தி தர வேண்டும், உதவி மையம் அமைத்திட வேண்டும், ஏழை அய்யப்ப பக்தர்களுக்கு யாத்திரை செல்ல உதவித் தொகை வழங்கிட வேண்டும், இலவச பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திட வந்தனர். இதையடுத்து அங்கு பணியில் இருந்த போலீசார் முற்றுகையிட சென்றவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் இந்து மக்கள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டு கோசங்கள் எழுப்பினர். அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended