• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் பிரதான் மந்திரி ஜன் விகாஷ் காரியக்ரம் திட்டத்தின் மூலம்  மகப்பேறு மையம் மற்றும் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு கட்டடத்திற்கான பூமி பூஜை.

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் பிரதான் மந்திரி ஜன் விகாஷ் காரியக்ரம் திட்டத்தின் மூலம்  மகப்பேறு மையம் மற்றும் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு கட்டடத்திற்கான பூமி பூஜை.

ராஜ்குமார்

UPDATED: May 18, 2023, 12:45:51 PM

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் பிரதான் மந்திரி ஜன் விகாஷ் காரியக்ரம் திட்டத்தின் மூலம் ஒருங்கிணைந்த மகப்பேறு மையம் மற்றும் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு கட்டடத்திற்கான பூமி பூஜையில் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் முன்னிலையில் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். 

பின்னர் அமைச்சர் தெரிவித்தாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் மருத்துவ தேவைகளை கருத்தில் கொண்டு மருத்துவத்துறைக்கு என பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து செயப்படுத்தி வருகிறார்.

அதன் அடிப்படையில் தென்காசி அரசு மருத்துவமனையில் ரூ. 22.05 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மகப்பேறு மையம் மற்றும் தலைமை குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டிடத்தில் தரைத்தளம் உள்ளிட்ட ஐந்து தளங்களில், பதிவு செய்யும் அறை, காத்திருக்கும் அறை, கூட்ட அரங்கு, ஓய்வு அறை, முதலமைச்சரின் காப்பீடு சிகிச்சை பகுதி, சத்தப்படுத்தப்பட்ட துணி துவைக்கும் அறை, அவசர சிகிச்சை பிரிவு ஆய்வகம், 250 படுக்கை வசதிகளுடன், மருந்தகம், அவசர சிகிச்சைப் பிரிவு, எஸ்கேன் வசதி, யோக மற்றும் சித்த மருத்துவ பிரிவு,

பேறுகால அறுவைச் சிகிச்சை அறை, குடும்ப கட்டுபாடு வார்டு, அறை, பிரசவ அனுவைச் சிகிச்சை வார்டு, பச்சிளம் குழந்தை தீவிரச் சிகிச்சை பகுதி, பொதுமக்கள், பெனர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றோர் மருத்துவமனையின் அனைத்து பகுதிக்கும் எளிதில் செல்வதற்கு ஏதுவாக சாய்வு தள வசதி மின் தூக்கி வசதிகள், உள்ளிட்ட சிறப்பான வசதிகளுடன் கட்டப்பட உள்ளது என தெரிவித்தார்,

இந்நிகழ்ச்சியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்.எம்.குமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தமிழ்செல்வி போஸ், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended