• முகப்பு
  • tamilnadu
  • பணி நிறைவு பாராட்டு விழா நடைபெறும் போதே பணி நீடிப்பு அரசாணை.

பணி நிறைவு பாராட்டு விழா நடைபெறும் போதே பணி நீடிப்பு அரசாணை.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பணி நிறைவு பாராட்டு விழா ஜூன் மாதம் 30 ஆம் தேதி வியாழக்கிழமை ( 30-06-2022 ) அன்றுடன் ஆசிரியர் பணி நிறைவடைந்து பணி நிறைவு பெற்று இந்நிகழ்விற்காக பணிக்காலத்தில் பயணித்த அருமைமிகு ஆசிரியர் பெருமக்கள் , தலைமை ஆசிரியர்கள் , கல்வித் துறைசார்ந்த அதிகாரிகள் , அலுவலர்கள் , ஆசிரியர் நலம்சார் இயக்கத் தோழர்கள் , உறவுகள் , நண்பர்கள் ஆர்வலர்கள் அனைவரும் கலந்துக்கொண்ட “ பணி இறுதிநாள் ” அன்று பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. நல்லாசிரியர் விருதுக்கு தகுதியுடைய பெ.ஜெகதீசன் , M.A. , B.Ed. , M.P.Ed. , M.Phil . , பட்டதாரி ஆசிரியர் ( சமூக அறிவியல் ) அ.மே.நி.பள்ளி , குத்தம்பாக்கம் மேனாள்தலைவர் - த.நா.ப.ஆ.கழகம் மே.கௌ.தலைவர் - த.நா.ப.ஆ.கழகம் மே . ஒருங்கினைப்பாளர் - த.நா.உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குனர்கள் சங்கம் மாநில துணைத்தலைவர் . - த.நா.கோ - கோ.கழகம் செயலாளர் - தி.மா.கோ- கோ.கழகம் செயலாளர்- வசந்தம் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் வசந்தம் நகர் , ஆவடி , சென்னை - 71 . 8939145210 , 9444254456 இவ்வளவு அமைப்புகளுடன் இணைந்து சமூக சேவை ஆற்றிவரும் சேவையின் சிகரம் பெ. ஜெகதீசன் அவர்கள் பணி நிறைவு பெறுவதை முன்னிட்டு இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அவருக்கு குத்தம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அப்பள்ளியின் அனைத்து பணியாளர்கள் சார்பாக தங்கமோதிரம் பரிசளித்தார். அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் வருடவாரியாக தங்களது நினைவு பரிசுகளை அவருக்கு வழங்கி ஆசிபெற்றனர். ஓய்வு பெறும் பெ. ஜெகதீசன் அவர்கள் அவர் பணி புரிந்த பள்ளிக்கு பீரோ ஒன்றும், பள்ளி நூலகத்திற்காக ஏறாளமான புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினார். உடன் பணி புரியும் ஊழியர்களும் இவரிடம் படித்த மாணவ மாணவிகளும் கணத்த மனதுடன் கண்ணீர் ததும்ப தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். இவர் தனது பாடத்தில் பலவருடங்களாக 100% தேர்ச்சியை கொடுத்தவர். இவரது சமூக அறிவியல் பாடத்தில் ஒவ்வொருவருடமும் நூறு மதிப்பெண்கள் பெறும் மாணவர்களும் உண்டு. மாணவர்களின் ஒழுக்கத்தை பேணி காத்தவர் இவர். தன்னுடன் பணிபுரிவோரை சகோதர சகோதரிகளாகவும் தன்னிடம் படித்த மாணவர்களை தனது பிள்ளைகளாகவும் பாவித்து வழிநடத்தியவர். இவரது பணி நிறைவு விழா நடைபெறும் முதல் நாளில் தமிழக அரசு ஒரு ஆணைவெளியிட்டது. அதாவது ஜூன் 30 க்குள் பணி ஓய்வு பெறுவோர் இக் கல்வி ஆண்டை நிறைவு செய்யும்வரை பணிபுரிய வேண்டுமென ஆணை வெளியிட்டுள்ளதால் இவரது பணி நிறைபெறாமல் தொடரும் என்பதால் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இதற்கு முன் இவரது வயது 58 வயது பூர்த்தி ஆன போதும் பணி ஓய்வு வயது 60 ஆக உயர்த்தி அப்போதைய அரசு ஆணைவெளியிட்டது குறிப்பிட தக்கது. அரசு ஆணை தானாக நடந்த விஷயம் என்றாலும் இவரது நல்ல குணத்திற்காகவே இறைவன் இவரது பணியை நீட்டிப்பதாக அனைவரும் இறைவனுக்கு நன்றி கூறினர். இவர்களுடன் நானும்... தி கிரேட் இந்தியா நியூஸிற்காக செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended