• முகப்பு
  • district
  • குடிநீர் வீணாகும் அவலம்... நடவடிக்கை மேற்கொள்ளாத நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகம்.

குடிநீர் வீணாகும் அவலம்... நடவடிக்கை மேற்கொள்ளாத நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தேனி மாவட்டம் பெரிய குளம் வடகரை அரசு போக்குவரத்து பணி மனை முன்பாக செல்லக் கூடிய குடிநீர் குழாயில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகின்றது. பெரிய குளம் நகராட்சி, தென்கரை பேரூராட்சி, தாமரைக்குளம் பேரூராட்சி, எண்டபுளி ஊராட்சி, கீழ வடகரை ஊராட்சி என பல ஊராட்சி, பேரூராட்சிகளில் முறையே தகவல் தெரிவிக்கப்பட்டும் இந்த குடிநீர் எங்களுக்கு உரியது அல்ல என அனைவரும் ஒருமித்த கருத்தாக கூறி வருவதால் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி , உடைப்பு சரி செய்யப்படாமல் இருந்து வருகிறது. கோடை காலத்தில் குடிநீர் பற்றாக் குறையை சமாளிக்க முடியாமல் இருக்கும் சூழ்நிலையில் குடிநீர் வீணாகி பொது வெளியில் குளம் போல் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது. மாவட்ட நிர்வாகம் உடனடி தலையீடு செய்து மேற்கண்ட பகுதியில் செல்லக்கூடிய குடிநீர் குழாய் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கொண்டு செல்லப் படுகின்றனவையா ? என்று பரிசீலனை செய்து சம்பந்தப் பட்ட ஊராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். செய்தியாளர் பா. கணேசன்.

VIDEOS

RELATED NEWS

Recommended