இரட்டை இலை முடக்கப்படுகிறதா?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

இரட்டை இலைசின்னத்தை முடக்க ஓ.பி.எஸ் முடிவு. பறந்தது பதினோரு பக்க கடிதம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று இரட்டைதலைமையில் இயங்கிவரும் அ.தி.மு.க.விற்கு ஒற்றைதலைமை தேர்வு செய்யப் பட்டால் இரட்டைஇலை சின்னம் முடக்கப் படும் என்று ஓ. பன்னீர் செல்வம் தரப்பினர் எச்சரித்து உள்ளனர். அ.தி.மு.க.வில் தற்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைதலைமை இருக்கும் போது இந்த இரட்டைதலைமையின் பதவிக் காலம் முடிவதற்கு உள்ளாகதிடீரென்று ஒற்றைத்தலைமையைக்கொண்டு வர எடப்பாடி பழனிச் சாமி முயற்சி எடுத்து வருகிறார். ஒற்றைத்தலைமை விவகாரம் விஸ்வ ரூபம் எடுத்துவரும் நிலையில், அ.தி.மு.க.வுக்கு ஒற்றைத் தலைமை தேர்வு செய்யப் பட்டால் அதற்கு ஓ . பன்னீர் செல்வம் தான் தலைமை ஏற்கவேண்டும் என்ற அவரது ஆதரவாளர்களும் , எடப்பாடி பழனிச் சாமி தான்தலைமை ஏற்கவேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும் சொல்லி வருகின்றனர். இதில், அ.தி.மு.கவில் இருக்கக் கூடிய 75 மாவட்டசெயலாளர்களில் எடப்பாடி பழனிச் சாமிக்கு 60 க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள் என்றும், அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்துக்கு பதினோரு மாவட்ட செயலாளர்கள் ஆதரவுதெரிவித்து உள்ளார்கள் என்றுதகவல். எடப்பாடி பழனிச் சாமி தலைமை ஏற்க ஆதரவு தெரிவித்து நேரிலும் தொலை பேசியிலும் ஆதரவு தெரிவித்து உள்ளனர் மா. செக்கள் என்று தகவல் பரவுகிறது. இந்த நிலையில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் தங்களது ஆதரவாளர்களுக்கு ஒரு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர். அதில் பதினோரு அம்சங்களை உள்ளடக்கி அந்தகடிதத்தை எழுதி இருக்கின்றனர். ஒற்றைத் தலைமைக்காக கட்சியின்விதிகள் திருத்தப் பட்டால் சட்டப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தற்போது இருக்கும் இரட்டை தலைமைபதவி காலம் முடிவதற்குள் மாற்றம்கொண்டு வந்தால் தேர்தல் ஆணையத்தின் பிரச்சனையை சந்திக்கநேரிடும். ஒற்றை தலைமை தேர்வு செய்யப் பட்டால் இரட்டை இலைசின்னமும் முடக்கப் படலாம் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. இதனால் அ.தி.மு.கவில் நாளுக்குநாள் அல்ல நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பு கூடிக்கொண்டே இருக்கிறது. செய்தியாளர் பா. கணேசன்.

VIDEOS

RELATED NEWS

Recommended