பிரம்மஹத்தி தோஷம் பற்றி தெரியுமா?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பிரமஹத்தி தோஷம் ஒருவருக்கு இருக்கிறதா? இல்லையா? என்பதை எப்படி அறிந்து கொள்வதெனப் பார்ப்போம். லக்னத்துக்கு 4 -ம் இடத்தில் அசுப கிரகங்கள் இருந்து, 6, 8, 12 -ம் இடங்களில் சுபர்கள் இருந்தாலும், 5, 9 - ம் வீடுகளுக்கு அதிபதிகளாக அசுப கிரகங்கள் இருந்தாலும், அவர்களுடன் சேர்ந்து இருந்தாலும், அசுபர் வீட்டில் இருந்தாலும் இந்த தோஷம் அவர்களுக்கு உள்ளதென அறியலாம். * ராகுவின் இருக்கும் ராசியில் இருந்து 5 அல்லது 9 - ம் வீட்டில் சனி, குரு சேர்க்கை ஏற்பட்டிருந்தாலும் (அதாவது சனியும் குருவும் ஒரே பாதத்தில் 10 டிகிரியில் இருக்கவேண்டும்) தோஷமாகும். பரிகாரங்கள்: * சிவன், பிரம்மா, விஷ்ணு மூவரும் உள்ள தலங்களுக்கு சென்று வழிபாடு நடத்த வேண்டும். இது தவிர ஒரு பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது அல்லது வயது முதிர்ந்த ஏழைத் தம்பதியருக்கு வீட்டில் உணவளித்து அவர்களுக்கு புதிய துணிமணிகள் வாங்கிக்கொடுத்து அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொள்ள வேண்டும். * உத்தமர்கோவில், கொடுமுடி, கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர், ஸ்ரீவாஞ்சியம் கோயில்களுக்கு புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சென்று தோஷ நிவர்த்தி பூஜை செய்துகொள்வது நல்லது. * ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்று அங்குள்ள ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நிதியில் எள்ளுச் சாதம் நைவேத்தியம் செய்து எல்லோருக்கும் கொடுத்தால் நல்ல பலன் அளிக்கும். * திருபுல்லாணி சென்று, இறந்த மூத்தோருக்கு (தகப்பனார் இல்லாதவர்கள்) பித்ருக் கடன் செய்து அதற்கு அருகே உள்ள தேவிப்பட்டினத்தில் உள்ள நவ பாஷாணத்திலான நவகிரகங்களின் வழிபாட்டை மேற்கொள்ளவேண்டும்''

VIDEOS

RELATED NEWS

Recommended