• முகப்பு
  • pondichery
  • மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச சட்டமன்றத்தை கூட்ட இந்த அரசு பயப்படுவதாக திமுக பகிரங்க குற்றச்சாட்டு !

மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச சட்டமன்றத்தை கூட்ட இந்த அரசு பயப்படுவதாக திமுக பகிரங்க குற்றச்சாட்டு !

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

புதுச்சேரியில் மின் துறையை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தினர் கடந்த 3 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் இன்று திமுக மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் அணி பால் கென்னடி, செந்தில்குமார் மற்றும் வழக்கறிஞர் சம்பத் ஆகியோர் இன்று மின் துறை ஊழியர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வைத்திலிங்கம் எம்பியும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார். அப்போது போராட்டத்தில் அவர்களிடம்பேசிய சிவா எம்எல்ஏ.... புதுச்சேரி மின் துறையை தனியார் மயமாக்கல் குறித்து எந்த ஒரு அரசியல் கட்சி இடமும் எந்த ஒரு அரசியல் தலைவர் இடமும் இந்த அரசு விவாதிக்கவில்லை. மத்திய அரசு அவர்களுக்கு தேவையான கவர்னர், முதல்வர், மற்றும் தலைமைச் செயலரை கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளது, இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே அனைத்து கட்சிகளுடன் க கலந்து ஆலோசித்து இது சம்பந்தமாக முடிவெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர் மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேசுவதற்கு சட்டமன்றத்தைக் கூட்டவே இந்த அரசு பயப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்.

VIDEOS

RELATED NEWS

Recommended