• முகப்பு
  • tamilnadu
  • பகுதி நேர ஆசிரியை தற்கொலை கண்டுக்கொள்ளாத திமுக அரசு.

பகுதி நேர ஆசிரியை தற்கொலை கண்டுக்கொள்ளாத திமுக அரசு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Feb 12, 2023, 5:23:53 PM

மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ?” - மகாகவி புதுக்கோட்டை ராணியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்த செல்வி ரேவதி என்பவர் (12.02.23) தற்கொலை செய்து மரணத்தை தழுவி இருக்கிறார். இது ஒட்டு மொத்த பகுதிநேர ஆசிரியர்களுக்கு மிக பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது. இந்நிலைக்கு காரணமாக சொல்லப்படுவது அப்பள்ளியில் பணி புரியும் சக ஆசிரியர் ஆசிரியைகளின் கேலி கிண்டல் எனவும் தலைமை ஆசிரியை அவர்கள் தந்த மன உளைச்சலும் தான் காரணம் என சொல்லப்படுகிறது. விகடன் செய்தியும் வெளியிட்டு இருக்கிறது பகுதி நேர பயிற்றுநராக வேலையை பார்த்து தன்னுடைய பெற்றோரை காப்பாற்றி வந்த அந்த சகோதரி வேலை செய்யும் இடத்தில் தந்த மன அழுத்தம் காரணமாக மரணத்தை தழுவி இருக்கிறார். இதற்கு துறை சார்ந்த விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் (மகளிர் அமைப்பு)வலியுறுத்துகிறது மேலும் இதுபோன்று இனிவரும் காலங்களில் எந்த மாவட்டத்திலும் ,எந்த பள்ளியிலும்இந்த கொடுமையான அவல நிலை ஏற்படாவண்ணம் காத்திடுமாறு வேண்டுகோள் வைக்கின்றோம் அன்பு, கருணை ,ஒழுக்கம், உயர் சிந்தனை கட்டுப்பாடு ,பிறரையும் தன்னைப் போன்று நேசித்தல் ,போன்ற சமூக நீதியுடன் கொண்ட கல்வியினை தான் கல்விக் கூடங்கள் கற்பிக்கின்றன. ஆனால் அந்தக் கல்விக் கூடங்களிலேயே நீதி மறுக்கப்பட்டு இந்த அவல நிலை ஏற்படுவது மிகவும் கண்டனத்திற்குரியது. உயிரை மாய்த்துக் கொண்ட அந்த சகோதரிக்கு நீதி கிடைப்பதோடு வயதான அவருடைய பெற்றோருக்கு அப்பள்ளியில் பணிபுரிவோர் இழப்பீட்டு நிதியை தரவும் பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் . பகுதி நேர ஆசிரியர் பணியில் இந்த 11 வருடங்களாக வேலை செய்யும் பகுதிநேர ஆசிரியர்கள் ,பள்ளி சமுதாயம், வீடு என பல வகைகளில் மன அழுத்தத்தோடு காலத்தை நகர்த்தி, பலபேர் இதனால் வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாமல் வாழும் வயதிலேயே மாண்டுள்ளனர் . தன்னுடைய தன் குடும்பத்தினுடைய அடிப்படைத் தேவைகளை கூட நிறைவேற்ற முடியாமல் நிறைய ஆண் பெண் என இரு பாலருமே அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அரசின் கனிவான கவனத்திற்கு கொண்டு வருகிறோம் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து விரைவில் பணி நிரந்தரம் எனற ஒற்றைத் தீர்வை வழங்கிடுமாறும் வேண்டுகோள் வைக்கின்றோம் என பகுதி நேர ஆசிரியர்கள் மகளீர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளனர். செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended