• முகப்பு
  • district
  • மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான வயது தளர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு !

மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான வயது தளர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு !

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தேனி மாவட்டம் , உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் , இன்று ( 06.07.2022 ) நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான வயது தளர்வு முகாமில் , வரப்பெற்ற மனுக்களின் எண்ணிக்கை , தகுதி வாய்ந்த மனுக்களின் எண்ணிக்கை , நிலுவையில் உள்ள மனுக்களின் எண்ணிக்கை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன் , இ.ஆ.ப. , அவர்கள் பார்வையிட்டு , ஆய்வு மேற்கொண்டு , தகுதி வாய்ந்த மனுக்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார் . துறை அதனைத்தொடர்ந்து , உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் . மாதாந்திர உதவித்தொகை , கல்வி உதவித்தொகை , திருமண உதவித்தொகை . விபத்து நிவாரண உதவித்தொகை , இயற்கை மரண உதவித்தொகை . குடும்ப அட்டை , பட்டா . பட்டா மாறுதல் , உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மற்றும் நிலுவையிலுள்ள மனுக்களின் எண்ணிக்கை , நிலுவையிலுள்ள மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் , அதற்கான பதிவேடுகள் குறித்தும் , அரசு பொது இ - சேவை மையத்தின் மூலம் வருமான சான்றிதழ் , இருப்பிட சான்றிதழ் , சாதி சான்றிதழ் , வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் தொ இணையதளத்தில் பொதுமக்களிடமிருந்து பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை , கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்களிடம் ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை , நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் . மேலும் , இம்முகாமில் , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் , முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு தலா ரூ .22,500 / - வீதம் ரூ 1,12,500 / - இயற்கை மரண உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் . முன்னதாக , உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் , பணியாளர்களின் எண்ணிக்கை , வருகை பதிவேடு , பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் குறித்த பதிவேடுகள் . வைப்பறையில் வைக்கப்பட்டுள்ள கோப்புகள் உள்ளிட்டவைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வயிைட்டு , ஆய்வு மேற்கொண்டார் . -2 இந்த ஆய்வின் போது , தனித்துணை ஆட்சியர் ( ச.பா.தி ) எம்.சாந்தி , மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சகுந்தலா , உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் கௌசல்யா , மாவட்ட அலுவலக மேலாளர் ( பொது ) ஜஸ்டின் சாந்தப்பா உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர் . வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் , தேனி . தேனி மாவட்ட செய்தியாளர் ஜீவா புகைப்படதாரர் ரங்கநாதன்.

VIDEOS

RELATED NEWS

Recommended