• முகப்பு
  • அரசியல்
  • 261 பள்ளி வாகனங்களை பார்வையிட்டு தரத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

261 பள்ளி வாகனங்களை பார்வையிட்டு தரத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

வாசுதேவன்

UPDATED: May 23, 2023, 3:08:43 PM

காட்பாடி சன்பீம் பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலமாக பள்ளி வாகனங்கள் 261ஐயும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது பேருந்துகள் மற்றும் வேன்கள் உள்ளிட்டவைகள் கலந்து கொண்டன. இந்த ஆய்வின் போது வாகனங்களின் டயர்கள். அவசர வழி, வாகனத்தின் உள்ளே அமரும் இருக்கைகள், பிளாட்பார தகடுகள்,

பேருந்தின் மேற்கூரை மழையின் காரணமாக ஒழுகுகின்றனவா, ஜன்னல்கள், கண்ணாடிகள், ஹாரன், வாகன ஒட்டுநரை கொண்டு பேருந்தை இயக்க வைத்து பிரேக், கிளட்ச் ஆகியவற்றை சோதனை செய்தார். 

இதில் 23-பேருந்துகள் தகுதி யானவைகளாக ஏற்றுக்கொள்ளப் படவில்லை. 238 பேருந்துகள் மட்டுமே தகுதியானவைகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

வாகனங்கள் குறைவாகவே வந்துள்ளது. இம்மாத இறுதிக்குள் அனைத்து பள்ளி பேருந்துகளும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

பள்ளி வாகனங்களை இயக்கும்போது ஓட்டுநர்கள் செல்போன்களை உபயோகப்படுத்தக் கூடாது. வேடிக்கை பார்த்துக் கொண்டு வாகனங்களை இயக்கக் கூடாது.

பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டு உள்ளவர்களுடன் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்கக் கூடாது. குறிப்பாக சிகெரெட், பீடி போன்றவற்றை பற்ற வைத்துக் கொண்டும் வாகனங்களை இயக்கக் கூடாது,

ஓட்டுநரின் கவனம் முழுவதும் பேருந்து இயக்குவதிலேயே இருக்க வேண்டும். கவனம் சிதறாமல் வாகனங்களை இயக்க வேண்டும். இந்தப் பள்ளி வாகனங்களில் மழலைகள் முதல் இளம் பருவ மாணவ மாணவிகள் பயணம் செய்வதால் எதிர்கால சந்ததிகளின் வளர்ச்சியையும்,

அவர்களது உயிரையும் பணயம் வைத்து பள்ளி பேருந்துகளில் பயணம் செய்வதால் கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் இந்தப் பள்ளி பேருந்து மற்றும் வேன்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். 

இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அவர்களை வேண்டி கேட்டுக்கொண்டார். ஒரு மாவட்ட ஆட்சியர் இப்படி ஒரு விரிவான தகவல்களை கொடுத்து ஓட்டுநர்களை மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போகச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வின் போது வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) வெங்கடேசன், காட்பாடி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பழனி, வேலூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு, காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், சன் பீம் பள்ளி தாளாளர் அரி கோபாலன் உடனிருந்தனர், முடிவில் மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் நன்றி கூறினார்.

VIDEOS

RELATED NEWS

Recommended