• முகப்பு
  • district
  • கொரோனா பெரும்தொற்று காலத்தில் பிரதமர், மருத்துவர்களை சந்தித்து நோயின் தன்மை குறித்து மருந்து மாத்திரைகள் இருப்பு குறித்தோ கேட்டதுண்டா ?

கொரோனா பெரும்தொற்று காலத்தில் பிரதமர், மருத்துவர்களை சந்தித்து நோயின் தன்மை குறித்து மருந்து மாத்திரைகள் இருப்பு குறித்தோ கேட்டதுண்டா ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணத்தில் மாநகர திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கலைஞர் அவர்களின் 99 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சாரங்கபாணி கீழவீதியில் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ ராசா எம்பி சாதாரண குக்கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த நான் அரசு பள்ளி கல்லூரிகளைப் அடுத்து பாராளுமன்ற உறுப்பினராகி மத்திய அமைச்சராகி பாராளுமன்றத்தில் பல்வேறு உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து அவர்களை திகைக்க வைத்ததுடன் பல்வேறு நாடுகளுக்கும் சென்று வந்த தன்னை போன்றவர்களை உருவாக்கியது திமுக இதுதான் திராவிடர் மாடல். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல். இந்தியாவில் எங்கும் கிடைக்காத இட ஒதுக்கீடு பெற்றது தான் திராவிட மாடல், இந்திய அரசியல் சட்டத்தின் இறையாண்மையின் மீது பதவிப்பிரமாணம் செய்து விட்டு மக்களவையில் ஜெய்ஸ்ரீராம் என முழங்குவது தான் ஆரிய மாடல். கும்பகோணத்திலிருந்து சவால் விடுகிறேன் தாங்கள் தான் தேச பக்தர்கள் என்று கூறிக்கொள்ளும் பிஜேபியை சேர்ந்தவர்கள் சுதந்திர போராட்டத்திற்காக ஆர்எஸ்எஸ், இந்து மகாசபை போன்ற அமைப்புகளில் இருந்து ஒருவராவது சிறை சென்றது உண்டா என்றும் கொரோனா பெரும்தொற்று காலத்தில் மாவீரன் என்று கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி அவர்கள் ஒரு நாளாவது வீட்டை விட்டு வெளியில் வந்து மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் நோயின் தன்மை குறித்து மருந்து மாத்திரைகள் இருப்பு குறித்து கேட்டது உண்டா. இந்தியாவிலேயே மருத்துவமனைக்குச் சென்று கவச உடையில் நோயாளியிடம் நலம் விசாரித்தல் ஒரே தலைவர் திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின்தான் என்றார். இப் பொதுக் கூட்டத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் மாநகர துணை மேயர் தமிழழகன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

RELATED NEWS

Recommended