• முகப்பு
  • இலங்கை
  • பொதுமக்களினால் விரட்டப்பட்ட தினத்தை நினைவு கூறும் வகையில் முன்னாள் ஜனாதிபதியின் வீடு அமைந்துள்ள மிரி கான பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நினைவு ஆர்ப்பாட்டம்.

பொதுமக்களினால் விரட்டப்பட்ட தினத்தை நினைவு கூறும் வகையில் முன்னாள் ஜனாதிபதியின் வீடு அமைந்துள்ள மிரி கான பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நினைவு ஆர்ப்பாட்டம்.

TGI

UPDATED: Mar 31, 2023, 7:28:28 PM

கடந்த வருடம் மார்ச் மாதம் 31 ஆம் தேதி முன்னாள் இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த நாட்டின் ஜனாதிபதி பதவியில் இருந்து பொதுமக்களினால் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட தினத்தை நினைவு கூறும் வகையில் முன்னாள் ஜனாதிபதியின் வீடு அமைந்துள்ள மிரி கான பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் 313.2023 நினைவு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

31.3.2023 மாலை இந்த நினைவு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேலை அதிகமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னாள் ஜனாதிபதியின் வெளியேற்றம் நியாயமானது என்றும் அவருக்கு பிறகு வந்திருக்கின்ற புதிய ஜனாதிபதியின் செயல்பாடு மிகப் படுமோசமாக இருப்பதாகவும்,

இதனை தாங்கள் வன்மையாக கண்டிப்பதாகவும் அது போன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தினை சமூக செயற்பாட்டாளர்கள் பலர் ஒன்று சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னாள் ஜனாதிபதியின் வீட்டினை நோக்கி நகர முற்பட்டபோது போலீசார் அவர்களை தடுத்த நிறுத்தியதுடன் போலீசார் அவர்களை விரட்டி அடிக்க முற்பட்டார்கள். இதன் போது போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரருக்கும் இடையில் வாக்குவாதங்கள் ஏற்பட்டது.

இதனை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறும் இல்லாதவிடத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் இதன் போது அறிவித்தனர்.

இருந்த பொழுதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீசார்ரோடு முரண்பட்ட நிலையில் காணப்பட்டனர். இதனை அடுத்து போலீசார் மூன்று பேரினை கைது செய்து போலீஸ் ஜீப் வண்டியில் ஏற்றினர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் சமூக செயற்பாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

VIDEOS

RELATED NEWS

Recommended