• முகப்பு
  • district
  • தாராசுரம் காமாட்சியம்மன் கோயில் இடத்தில் குடியிருப்போருக்கு அநியாய வாடகை உயர்வை ரத்து செய்திட ஆர்ப்பாட்டம்.

தாராசுரம் காமாட்சியம்மன் கோயில் இடத்தில் குடியிருப்போருக்கு அநியாய வாடகை உயர்வை ரத்து செய்திட ஆர்ப்பாட்டம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணம் அருகே தாராசுரம் காமாட்சியம்மன் கோயில் இடத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாடகைக்கு பல ஆண்டு காலமாக குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசு, இவர்களுக்காண வாடகையை நிர்ணயம் செய்ய ஐஏஎஸ் தலைமையிலான குழுவை நியமனம் செய்துள்ள நிலையில், அதற்கு முன்பாகவே, அறநிலையத்துறை தன்னிச்சையாக, தாறுமாறாக வாடகையை உயர்த்தி, பல லட்சங்கள் வாடகை பாக்கி இருப்பதாக கூறி, வீட்டின் மின் இணைப்பை, குடிநீர் இணைப்பை துண்டிப்போம் என மறைமுகமாக இப்பெருந்தொகையை கட்ட மிரட்டி வருகிறது . எனவே, தாறுமாறாக உயர்த்திய வாடகை ரத்து செய்யவும், வாடகை நிலுவைகளை தள்ளுபடி செய்திடவும், காலதாமதமின்றி வாரிசு மாற்றம் செய்து தர கோரியும், அரசாணை 318ன்படி ஏழை எளிய மக்களுக்கு நிலப்பட்டா வழங்கிட கோரியும் தாராசுரம் கடைவீதியில், காமாட்சியம்மன் திருக்கோயில் இடங்களில் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் எஸ் வீரமணி தலைமையில் கோரிக்கை முழக்க கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தஞ்சை மாவட்ட தலைவர் சா.ஜீவபாரதி, மாநகராட்சி உறுப்பினர் ஆ செல்வம், உள்ளிட்ட திரளான பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

RELATED NEWS

Recommended