• முகப்பு
  • district
  • கும்பகோணத்தில் தமிழ்நாடு சார் பதிவாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

கும்பகோணத்தில் தமிழ்நாடு சார் பதிவாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Feb 14, 2023, 4:17:24 PM

கும்பகோணத்தில் தமிழ்நாடு சார் பதிவாளர் சங்கம் சார்பில் ரியல் எஸ்டேட் சட்டத்தின் படி ப்ரமோட்டார் அல்லது ஏழை எளிய மக்கள் மனைகளாக பதிவதில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும். அதிகரித்து வரும் மக்கள் தேவைக்கேற்ப புதிய பணியிடங்களை உருவாக்கியும் காலிப்பணியிடங்களை நிரப்பியும் படித்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும் தமிழரசன் இரு மொழி கொள்கைக்கு எதிரான மூன்றாவது மொழி தேர்வினை ரத்து செய்ய வேண்டும். அரசாணை 80ன் படி பணியிடை நீக்கத்தில் உள்ள அனைத்து பணியாளர்களையும் உடனடியாக பணியில் அமர்த்திட வேண்டும் பதிவுத்துறையில் ஏற்கனவே தனியார் மூலம் செயல்படுத்திக் கொண்டிருக்கும் ஒப்பந்த வெளி முகமை வேலைகளில் ரத்து செய்து அரசு நிறுவனங்களான என் ஐ சி ஆகியவற்றின் மூலம் கணினி மயமாக்கப்பட வேண்டும். பொது கலந்தாய்வின் மூலமாக பணியிட மாற்றங்களை நிரப்ப வேண்டும் உரிய காலத்தில் முறையாக பணி மூப்பு பட்டியல் வெளியிட்டு பதிவு உயர்வினை வழங்கிட வேண்டும் பதிவு சட்ட பிரிவு 86ன் கீழ் வழங்கப்பட்டுள்ள பணி பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு அகவிலைப்படி நிலுவைத்தொகை ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி சார் பதிவாளர் அலுவலகம் முன்பு சார் பதிவாளர் மாவட்ட அமைப்பாளர் நாகமுத்து தலைமையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல செயலாளர் செந்தில்குமார் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வட்டச் செயலாளர் ரமேஷ் வட்டத் தலைவர் வெங்கடேசன் வட்ட பொருளாளர் மதியழகன் வட்ட துணைத் தலைவர் பிரபாகரன் மகளிர் துணைக்குழ மாவட்ட அமைப்பாளர் கவிதா மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள். கும்பகோணம் மாவட்ட செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

RELATED NEWS

Recommended