• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • கோவில்கள் அருகாமையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி காமராஜர் மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

கோவில்கள் அருகாமையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி காமராஜர் மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

லட்சுமி காந்த்

UPDATED: May 8, 2023, 7:14:33 AM

கோவில் நகரமாக விளங்கும் காஞ்சிபுரம் மாநகரில் மிக முக்கிய பிரதான சாலையாக அன்னை இந்திரா காந்தி சாலை உள்ளது.

பேருந்து நிலையம் அருகே உள்ள இந்த சாலையில் மிகவும் பிரசித்தி பெற்ற சித்திரகுப்தர் கோவில் அருகாமையில் இயங்கி வரும் அரசு மதுபான கடையால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

அதேபோல் மதுபான கடை முன்பு அவ்வப்போது தகராறு நடப்பதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்படுகிறது . அதனாலேயே சித்திரகுப்தர் கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் இலகுவாக சாலையை கடக்க முடியாமலும் , மனநிம்மதியுடனும் சாமியை கும்பிட முடியவில்லை என தெரிவிக்கின்றனர்.

அதேபோல் பெரிய காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில் மிகவும் பிரசித்தி பெற்ற அவுலியா தர்கா உள்ளது. இதன் இடப்புறத்தில் உலக அளவில் பிரசித்து பெற்ற சங்கர மடமும் வலது புறத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆதி காமாட்சி ஆலயமும் உள்ளது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையால் வணிகர்களும், அப்பகுதியில் வசிப்பவர்களும் நிம்மதி இன்றி தவிக்கின்றனர். அவ்வழியே செல்லும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்கின்றது .

மது பிரியர்கள் ஏராளமானோர் டாஸ்மாக் கடை முன்பு குவிந்து விடுவதாலும் மதுபானத்தை வாங்கி வந்து சாலையிலேயே குடிப்பதாலும் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.

அப்பகுதி மக்கள் இது குறித்து, 4 மாதங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆய்வு கூடத்தில் அமைச்சர் தா. மோ.அன்பரசு இடம் கோரிக்கை வைத்தனர். 

மக்களின் குறைகளை காது கொடுத்து கேட்ட அமைச்சர் உணர்ச்சி வசப்பட்ட உடனடியாக டாஸ்மாக் கடையை அகற்ற உத்தரவிட்டார். உத்தரவிட்டு சுமார் 120 நாட்கள் ஆகியும் அந்த டாஸ்மாக் கடையை அசைத்துக் கூட பார்க்க முடியவில்லை . 

டாஸ்மாக் கடை மற்றும் அனுமதி இல்லாத மது கூடத்தில் இருந்து என்னென்ன பெற வேண்டுமோ அனைத்தையும் திமுகவினரும், அரசு மதுபான அலுவலக ஊழியர்களும் பெற்று விட்டனர் எனக் கூறப்படுகிறது.

இதுநாள் வரையில் டாஸ்மாக் கடை அகற்றப்படாததால் டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து காமராஜர் மக்கள் கட்சி சார்பில் மாநில பொது செயலாளர் பா.குமரய்யா தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோசங்கள் எழுப்பப்பட்டது.

VIDEOS

RELATED NEWS

Recommended