• முகப்பு
  • district
  • தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Feb 14, 2023, 4:08:12 PM

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கத்தின் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட அமைப்பாளர் ரமேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ரியல் எஸ்டேட் சட்டத்தின்படி ப்ரமோட்டர் அல்லாத ஏழை எளிய மக்களுக்கு மனைகளாக பதிவதில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும். அதிகரித்து வரும் மக்கள் தேவைக்கேற்ப புதிய பணியிடங்களை உருவாக்கவும் காலி பணியிடங்களை நிரப்பவும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிட வேண்டும். தமிழக அரசின் இரு மொழி கொள்கைக்கு எதிராக மூன்றாவது மொழி தேர்வினை ரத்து செய்ய வேண்டும். அரசாணை 80 படி பணியிடை நீக்கத்தில் உள்ள அனைத்து பணியாளர்களையும்உடனடியாக பணியில் அமர்த்திட வேண்டும் பதிவு துறையில் ஏற்கனவே தனியார் மூலம் செயல்படுத்திக் கொண்டிருக்கும் ஒப்பந்த வெளிமுகமை வேலைகளை ரத்து செய்து அரசு நிறுவனங்களாக NIC, ELCOT ஆகியவற்றின் மூலம் கணினி மையமாக்கபட வேண்டும். பொது கலந்தாய்வின் மூலமாக பணியிட மாற்றங்களை நிரப்ப வேண்டும் உரிய காலத்தில் முறையான பணி மூப்பு அடிப்படையில் பட்டியல் வெளியிட வெளியிட்டு பதவி உயர்வினை வழங்க வேண்டும். பதிவு சட்டப்பிரிவு 86 இன் கீழ் வழங்கப்பட்டுள்ள பணி பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டு ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு அகவிலைப்படி நிலுவை தொகை உடனடியாக வழங்க வேண்டும். புதிய ஓய்வு திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வதில்லை அமல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சேகர் , பாண்டியன், திருமலை, ராஜ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கி.கணேஷ் திருப்பத்தூர் மாவட்டம்.

VIDEOS

RELATED NEWS

Recommended