• முகப்பு
  • திருவாரூரில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் பாலியல் வன்முறைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்.

திருவாரூரில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் பாலியல் வன்முறைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்.

Entertainment

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் தமிழக கல்வி நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்வி நிலையங்களில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து  திருவாரூர் அருகிலுள்ள கிடாரங்கொண்டான் திருவிக அரசு கலைக்கல்லூரி முன்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து மாவட்ட துணைச் செயலாளர் பிரகாஷ் கூறுகையில் கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் கல்வி நிலையங்களில் தலைவிரித்தாடும் பாலியல் வன்கொடுமைகளை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்ட விரும்புவதாகவும், கோவை திண்டுக்கல்,கரூர் என தொடர்ந்து மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு என்பது கொடூரமாக நடந்து கொண்டு இருக்கிறது. எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனவும், பள்ளி கல்லூரிகளில் புகார் பெட்டிகள் அமைக்கப்பட வேண்டும் எனவும், கல்வி நிலையங்களில் பாலியல் குற்றங்கள் குறித்த அறிவை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் சுர்ஜித் மாவட்ட துணை தலைவர் சந்தோஷ் மாவட்ட குழு உறுப்பினர்கள் பிரவீன், ஈஸ்வரன்,மாலிஷா உள்ளிட்ட திறுவிக கல்லூரி மாணவ மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended