• முகப்பு
  • district
  • புதிய ரோபோ நர்ஸ் ஒன்றை உருவாக்கி, கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரி மாணவியர் குழு சாதனை !

புதிய ரோபோ நர்ஸ் ஒன்றை உருவாக்கி, கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரி மாணவியர் குழு சாதனை !

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் துறையில் பயிலும் நிறைவாண்டு மாணவியர்களான ரித்திகா, ஷாஹீன் பேகம், இலக்கியா மற்றும் ஜெயா ஆகியோர் குழுவாய இணைந்து, உதவிப்பேராசிரியர் சோலங்கிளியின் வழிகாட்டுதலின்படி, உயிர் கொல்லும் நோயான கொரோனா உள்ளிட்ட தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும், மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் எதிர்பாராவிதமாக நோய்க்கு ஆளாகி, உயிரிழக்கவும் நேரிடுகிறது . இதனை முற்றிலும் தடுக்கும் வகையிலும் அதே சமயத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சையில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாத வகையில், 2 மாத கால ஆய்வில், ரூபாய் 20 ஆயிரம் மதிப்பீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளிடம் இருந்து உடலின் வெப்பநிலை, ரத்தத்தில் உள்ள பிராணவாயு அளவு, இதயத்துடிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்து அதன் விவரங்களை அறையில் உள்ள மருத்துவருக்கு அனுப்பவும், அந்த விவரங்களுக்கு ஏற்ப, மருத்துவர்கள் குறிப்பிடும் மருந்து மாத்திரைகளை நோயாளிகளுக்கு வழங்கிடவும், மேலும் மருத்துவரும், சம்மந்தப்பட்ட நோயாளியும், காணொளி வாயிலாக உரையாடவும் வகை செய்யும் வகையிலும், நோயாளிகள் தனிமைபடுத்தப்பட்டுள்ள அறையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கும் வகையிலும் இந்த ரோபோ நர்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பு. இந்த நவீன ரோபோ நர்ஸை, திருப்பனந்தாள் வட்டார மருத்துவ அலுவலர் மரு. அபினேஷ், இன்று கல்லூரி வளாகத்தில் நேரில் பார்வையிட்டார், மாணவியர் குழு அவரிடம், இந்த ரோபோவின் சிறப்பு அம்சங்கள் குறித்து எடுத்து கூறினர், மாணவியர் குழுவின் கண்டு பிடிப்பை மருத்துவர் அபினேஷ் வெகுவாக பாராட்டி, பொது மக்கள் பயன்பாட்டிற்கு அர்பணித்தார். இந்நிகழ்வில், கல்லூரி முதல்வர் பாலமுருகன், துணை முதல்வர் துறைத்தலைவர் முனைவர் சாஜு, மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு சாதனை புரிந்த மாணவியர் குழுவை பாராட்டி மகிழ்ந்தனர். பேட்டி : மாணவியர்கள் 1. ரித்திகா 2. ஷாகீன் பேகம் கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

RELATED NEWS

Recommended