• முகப்பு
  • tamilnadu
  • அரசுப்பேருந்து படிக்கட்டு உடைந்து விபத்து.

அரசுப்பேருந்து படிக்கட்டு உடைந்து விபத்து.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

அரசுப்பேருந்து படிக்கட்டு உடைந்து விபத்து. - இரண்டு பேர் சஸ்பெண்ட். திருவாரூர்மாவட்டம் கங்களாஞ் சேரி வழியாக நாகூர்வரையில் நகரப்பேருந்து காலை, மாலை என இரு வேளைகளிலும் பள்ளி, கல்லூரிசெல்லும் மாணவ , மாணவிகளின் நலன்கருதி இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிலதினங்களுக்கு முன்பு திருவாரூரிலிருந்து கங்களாஞ் சேரி வழியாக நாகூர்வரையிலான நகரப்பேருந்து ஒன்று வந்துக்கொண்டிருந்தபோது, கங்களாஞ் சேரி ரயில்வே கேட்டருகே வேகத் தடையில் ஏறியிறங்கியது. அப்போது பேருந்தின் முன்பக்கத்தில் இருந்த படிக்கட்டு உடையும்சத்தம் கேட்டது. இந்தசத்தத்தால் ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தி உள்ளார். பேருந்தில்படிக்கட்டு முழுவதுமாக உடைந்துவிழுந்தது. இதில் பயணித்தமாணவர்கள் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர்தப்பினர். இதையடுத்து பின் பக்கத்தில் உள்ளபடிக்கட்டு வழியாகபயணிகள் அனைவரும் பேருந்திலிருந்து கீழே இறங்கினர் அவர்கள் மாற்றுப்பேருந்து மூலம் திருவாரூர் வந்து அடைந்தனர். இதற்கான வீடியோ இணையத்தில் வைரலாகப்பரவியது. இந்நிலையில் திருவாரூர் கங்களாஞ் சேரியில் ஜூலை 6 ம் தேதி 37 P அரசுப் பேருந்துப்படிக்கட்டு உடைந்த விவகாரத்தில் இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். நாகை மண்டலப்போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் மகேந்திரகுமார் உத்தரவின் பேரில், போக்குவர்த்து கழக தொழில் நுட்பப்பணியாளர் வீரபாண்டியன், பொறியாளர் அசோகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended