• முகப்பு
  • education
  • 36 தனியார் பள்ளிகளில் 150 மேற்பட்ட வாகனங்களை கோட்டாட்சியர் ஆய்வு

36 தனியார் பள்ளிகளில் 150 மேற்பட்ட வாகனங்களை கோட்டாட்சியர் ஆய்வு

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு தமிழகத்தில் பள்ளிகள் கடந்த 13ஆம் தேதி திறக்கப்பட்டுள்ள நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் கும்பகோணம், பாபநாசம், வலங்கைமான் , திருவிடைமருதூர், ஆகிய 4 வட்டங்களில் உள்ள 36 தனியார் பள்ளிகளில் உள்ள மாணவ மாணவிகளை அழைத்துச் செல்லக்கூடிய பஸ்,வேன் உள்ளிட்ட 150 மேற்பட்ட வாகனங்களை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நிறுத்தி வைத்து கோட்டாட்சியர் லதா தலைமையில் ஆய்வு. பள்ளி வாகனங்களில் இருக்கைகள், அந்த வாகனங்களில் கதவு, புட்போர்டு, ஜன்னல், டிரைவர் கேபின், அவசர வழி, முதலுதவி பெட்டி, தொடர்பு எண், பள்ளி வாகனங்களின் நிறம், குறிப்பிட்ட இடத்தில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு உள்ளதா? மாணவர்கள் ஏறும் வழி, இறங்கும் வழிகளில் உறுதியான கதவுகள், படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா உள்ளிட்ட வசதிகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வில் மோட்டார் வாகன ஆய்வாளர் தாமரைக்கண்ணன், காவல் துணை கண்காணிப்பாளர் அசோகன், தீயணைப்புத் துறை அலுவலர் சேகர் மற்றும் வருவாய்துறை, காவல்துறை, போக்குவரத்துத்துறை, கல்வித்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை ஆகிய துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வின் போது தீவிபத்து ஏற்பட்டால் எப்படி தடுப்பது செயல் விளக்கமும் விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முதலுதவி செய்வது எப்படி என்பது குறித்து செயல் விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் வாகன ஓட்டுனர்களின் லைசென்ஸ், வயது விவரம்,பார்வைத்திறன் உள்ளிட்டவை சரியாக உள்ளதா எனவும் பரிசோதனை செய்யப்பட்டன. தொடர்ந்து தனியார் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஓட்டுநர் நடத்துநர்களுக்கு சாலைப் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.

VIDEOS

RELATED NEWS

Recommended