• முகப்பு
  • pondichery
  • அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் , கட்சிக்குள் இரு கோஷ்டியாக எதிர்ப்பு..

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் , கட்சிக்குள் இரு கோஷ்டியாக எதிர்ப்பு..

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

இந்திய ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை பணிக்கு அமத்துவதற்கு மத்திய அரசு அக்னி பாத் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்த உள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பிள்ள நிலையில் புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜோஷ்வா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்கள். அப்பொழுது ஆர்ப்பாட்டம் தொடங்கியவுடன் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்தியலிங்கம் எம்பி, காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன், ஆகியோர் ஒரு கோஷ்டியாக வந்து ஆர்ப்பாட்டத்தில் நின்று கோஷம் எழுப்பி விட்டு புறப்பட்டு சென்றார்கள்... இதை அடுத்த ஐந்து நிமிடம் கழித்து மற்றொரு கோஷ்டியாக முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், மற்றும் முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், ஆகியோர் ஒரு கோஷ்டியாக வந்து அவர்களும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.... இதுபோன்று காங்கிரஸ் இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து மாறி மாறி போராட்டத்தில் கலந்து கொண்டது அவர்களுக்குள் உள்ள கோஷ்டி மோதலை வெளிப்படையாக தெரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பேட்டி: ஜோஷ்வா ஜெரால்ட் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ், தேசிய செயலாளர். பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்.

VIDEOS

RELATED NEWS

Recommended