விளையாட்டு வீரருக்கு மதிமுக சார்பில் வாழ்த்து.

தாரிக்கனி

UPDATED: May 21, 2023, 1:38:46 PM

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம், சேத்திராபாலபுரத்தைச் சார்ந்த ஊனமுற்ற விளையாட்டு வீரர் பா.ஜெயச்சந்திரன் ஊனமுற்றோருக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து பல வெற்றிகளை குவித்து வருபவர். 

நேபாளில் உலக அளவில் நடைபெற்ற அமர்வு கைப்பந்து ஆட்டத்தில் இந்திய அணியில் சிறப்பாக விளையாடி தங்கப்பதக்கம் பெற்று முதல் இடம் பிடித்திருக்கிறார். 

தொடர்ந்து பண்ணிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வில் குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைபள்ளி மாணவி கே.கார்த்திகா மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார்.

இதனை அடுத்து மதிமுக மாநில இளைஞர் அணிச் செயலாளர் ப.த.ஆசைத்தம்பி இருவர்களின் இல்லங்களுக்கும் நேரில் சென்று சந்தித்து வாழ்த்தினர். 

VIDEOS

RELATED NEWS

Recommended