• முகப்பு
  • கோயிலை நிர்வாகம் செய்ய இரு தரப்பினரிடையே மோதல்

கோயிலை நிர்வாகம் செய்ய இரு தரப்பினரிடையே மோதல்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடலூர் மாவட்டம் : ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மழவராயநல்லூர் கிராமத்தில் சீதளாதேவி மாரியம்மன் கோயில் ஊர் பொது மக்களால் கட்டப்பட்டது. கோயிலை பூசாரி ராமலிங்கம் என்பவர் பூஜைகளை செய்து வந்த நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த கணேச மூர்த்தி என்பவர் பூஜை செய்து வந்தார், கணேசமூர்த்தி மீது ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளதால் இவரை கோயில் பூசாரியாக ஏற்றுக்கொள்ள முடியாது என ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர், இதனைத் தொடர்ந்து இரு தரப்பினர்கும் இடையே தகராறு ஏற்பட்டது , இதனால் ஊராட்சி மன்ற தலைவர் பிருந்தா வரதராஜன், திமுக கிளைச் செயலாளர் ராஜா , காவல்துறை இன்ஸ்பெக்டர் சுபாஷினி , மற்றும் உள்ளூர் நாட்டாமைகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து பேசி ஏற்கனவே கோயில் பூஜை செய்து கொண்டிருந்த ராமலிங்கத்தின் மனைவி லட்சுமியிடம் கோயில் சாவியை ஒப்படைத்தனர். இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இரு தரப்பும் சமாதான முறையில் கலைந்து சென்றனர். கடலூர் செய்தியாளர் சண்முகம்.

VIDEOS

RELATED NEWS

Recommended