• முகப்பு
  • education
  • கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி இயற்பியல் துறை சார்பில் அலைபேசி, மடிக்கணினி பயன்படுத்தாமல் நிகழ்ச்சிகள் நடத்தி அசத்தல் !

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி இயற்பியல் துறை சார்பில் அலைபேசி, மடிக்கணினி பயன்படுத்தாமல் நிகழ்ச்சிகள் நடத்தி அசத்தல் !

THE GREAT INDIA NEWS

UPDATED: Jan 31, 2023, 12:42:38 PM

கோவை-அவினாசி சாலையில் நவஇந்தியா பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை ,அறிவியல் கல்லூரி. இக் கல்லூரியில் நாளொரு மேனியும் - பொழுதொரு வண்ணமுமாக மாணவர்-மாணவியர்களின் நலனுக்காக ஏதாவது பயிற்சி நடத்தப்படுவதை கல்லூரி நிர்வாகம் ஆலோசனையின்பேரில், கல்லூரி செயலர்- முதல்வர், முனைவர் பி.எல்.சிவக்குமார் உத்தரவின்படி, அந்தந்த துறை தலைவர்-தலைவிகள் வித்தியாசமானதாகவும், மாணக்கர்களுக்கு மனதில் புரியும் வகையில் பயிற்சியை மேற்கொள்வர். அதனடிப்படையில், கல்லூரியில் இயற்பியல் துறை தலைவி எஸ்.பூங்குழலி தலைமையில் இயற்பியல் துறையினர் காலை 08.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை கேட்ஜெட் இலவச நாள் - டிஜிட்டல் டிடாக்ஸ் நடத்தினர். இந்நாளில், துறையைச் சார்ந்த மாணவர் - மாணவியர்கள், பேராசிரியர்-பேராசிரியைகள் அலைபேசி, மடிக்கணினிகளை பயன்படுத்தவில்லை. மேலும், மாணவர் - மாணவியர்கள் கேட்ஜெட் இல்லாமல் மகிழ்ச்சி பொங்க பல நிகழ்ச்சிகளை நடத்தி சாதனை புரிந்தனர். இந் நாளில், மாணவர் - மாணவியர்கள், பேராசிரிய பெருமக்கள் அவர்களது சாதனங்களில் இருந்து துண்டிக்கவும், அவற்றை குறைவாகப் பயன் படுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. டிஜிட்டல் உலகத்திலிருந்து ஓய்வு எடுப்பது நமது மன அழுத்தத்தை குறைப்பதுடன், நிகழ்காலத்தில் கவனம் செலுத்தி நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவதற்கான நல்ல வாய்ப்பு என உணர முடிந்ததென மாணவர் - மாணவியர்கள் உற்சாகம் பொங்க மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். மேலும், எங்கள் கல்லூரியில் எங்களுக்கு கல்வியோடு எங்களது எதிர்கால முன்னேற்றத்திற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சிந்தித்து... சிந்தித்து...அவற்றை நடைமுறை படுத்துவதோடு எங்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருப்பது எங்களுக்கும், பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கிறது... எனவும் கூறினர். சிறப்பு செய்தியாளர் : மாமுஜெயக்குமார்.

VIDEOS

RELATED NEWS

Recommended