• முகப்பு
  • crime
  • பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தில் இரு பிரிவினரிடையே மோதல்.

பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தில் இரு பிரிவினரிடையே மோதல்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தில் தலித் குடியிருப்பு பகுதியில் வேறு சாதியினர் புகுந்து சுமார் 50பேர் கொண்ட கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.. இதனை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சி.தமிழ்மாணிக்கம் தலைமையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.. இந்நிலையில் லாடபுரம் தலித் மக்கள் ஒன்று திரண்டு சுமார் 200க்கும் மேற்பட்டோர் பெரம்பலூர் நோக்கி வரும் வழியில் காவல்துறையால் தடுக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் பெரம்பலூர் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்க முற்பட்டனர்.. இதனையறிந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பெரும் திரளாக சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.. இதனால் காவல்துறைக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.. பின்னர் மாவட்ட செயலாளர் சி.தமிழ்மாணிக்கம் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை நேரில் சந்தித்து கள நிலவரத்தை கூறினோம்.. ✓தலித் பகுதியில் அப்பாவி மக்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.. ✓தாக்குதல் நடத்திய சாதிவெறியர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கூறினோம் உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.. என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பெரம்பலூர் மாவட்ட செய்தித் தொடர்பாளர் மு.உதயகுமார் தெரிவித்தார். பெரம்பலூர் செய்தியாளர் ஜஹாங்கீர்.

VIDEOS

RELATED NEWS

Recommended