• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • முதல்வர் மு.க .ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் செய்கை மொழியில் சட்டமன்ற நிகழ்ச்சிகளை வெளியிடுவதற்கு உத்தரவிட்டதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

முதல்வர் மு.க .ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் செய்கை மொழியில் சட்டமன்ற நிகழ்ச்சிகளை வெளியிடுவதற்கு உத்தரவிட்டதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

முத்தையா

UPDATED: May 7, 2023, 11:42:25 AM

நாமக்கல் மாவட்ட காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் முன்னேற்ற சங்கம் பொதுக்குழு கூட்டம் நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள எஸ் பி எம் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அதன் தலைவர் ஆர் .பழனிசாமி தலைமையில் இன்று (ஞாயிறு) 7.5.2023 நடைபெற்றது.

இதில் முக்கியமாக 2023 முதல் 2025 வது ஆண்டு வரை சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.

தேர்தல் நடத்தும் அதிகாரியாக அகில இந்திய காதுகேளாதோர் கூட்டமைப்பு தமிழ்நாடு செயற்குழு உறுப்பினர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு தேர்தலை நடத்தினார்.

தேர்தல் பார்வையாளராக தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு தலைவர் என்.ராஜேஷ் பாபு, பங்கேற்றார்.

இதில் துணைத் தலைவர் சி .நவீன்குமார், பொதுச் செயலாளர் டி. தாமோதரன், துணைச் செயலாளர் அம்சத், பொருளாளர் கே. விஜயகுமார், மற்றும் டி. சங்கர், முரளிகுமார் , பி அமுதா, பி .லோகேஷ், எஸ் .சதாம் உசேன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் கலந்து கொண்டனர்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் செய்கை மொழியில் சட்டமன்ற நிகழ்ச்சிகளை வெளியிடுவதற்கு உத்தரவிட்டதற்கு நன்றி தெரிவித்தும், 

காதுகேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அனுமதி வழங்க வேண்டும் என்றும், 

காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவருக்கு சுய உதவி குழு அமைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். 

காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனியாக நல வாரியம் அமைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை, வாழ்க்கையை, அவர்களின் குடும்பத்தாரின் வளர்ச்சியை, மேம்படுத்த வேண்டுமென்றும் இந்த நாமக்கல் மாவட்ட காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் முன்னேற்ற சங்கம் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

VIDEOS

RELATED NEWS

Recommended